"ஒற்றள பெழாவழி பெற்ற வலகிலவே. - தனிநிலை யொற்றிவை தாமல கிலவே, யளபெடை யல்லாக் காலை யா யின். - ஈரொற் றாயினு மூவொற் றாயினு, மோரொற் றியல வென்மனார் புலவர்." என்றார் பலரும். இவை மேற்கோள். எ-று. (7) |
209. | கலித்தளை வெண்சீர் கலந்த விகற்பமே. | |
(இ-ள்.) கலித்தளை யாமாறுணர்த்துதும். வெண்சீர்வந்து நின்றசீ ரீற்றசையும் வருஞ்சீர் முதலசையு மொன்றாது காயாகியநேர் முன்னிரை வரப் பெறின் கலித்தளையாம். - "நிரையீ றல்லாவுரிச்சீர் முன்னர், நிரைவரு காலை கலித்தளை யாகும்." என்பதியாப்பருங்கலம். (வ-று.) "செல்வப்போர்க் கதக்கண்ணன் செயிர்த் தெறிந்த சினவாளி, முல்லைத்தார் மறமன்னர் முடித்தலையை முருக்கிப்போ, யெல்லைநீர் வியங்கொண்மூ விடைநுழையு மதியம்போன், மல்லலோங்கெழில் யானை மருமம்பாய்ந் தொளித்ததே." என வெண்சீருங் கலித்தளையும் வந்தவாறு காண்க. எ-று. (8) |
210. | வஞ்சித் தளையாம் வஞ்சிக் குரிச்சீ ரொன்றலு மொன்றா தொழுகலு மென்ப. | |
(இ-ள்.) வஞ்சித்தளை யாமாறுணர்த்துதும். கனியீற்ற வுரிச்சீர் வந்து நின்றசீ ரீற்றசையும் வருஞ்சீர் முதலசையு மொன்றி நிரைமுன் னிரையே வரப்பெறி னொன்றிய வஞ்சித்தளையாம். அவ்விரண்டொன்றாது நிரைமுன் னேர்வரி னொன்றா வஞ்சித்தளையாம். ஆகையின் வஞ்சித்தளையு மிருவகைத் தெனப்படும். - "தன் சீரிறுதி நிரையோ டொன்றலு, மஃதே நேரோ டொன்றா தொழுகலும், வஞ்சித் தளையின் வகையிரண் டாகும்." என்பதியாப்பருங் கலம். (வ-று.) "விரைவாய் மலர்நக் குவப்பன மிடை வண் டினம்யா ழொலிப்பன, கரைவா யெழுமுகைத் தாழைகள் கடி கமழ் வனகா வெங்கணு, மிரைவாய் விரியிள வேனிலீண் டின்புற் றிரு நிலத் துலா வவே." என வஞ்சிச்சீர் வந்தொன்றியு மொன்றாது மிருவகை வஞ்சித்தளை வந்தவாறு காண்க. எ-று. (9) |
அடியிலக்கணம் வருமாறு:- Metrical Lines. |
211. | அடியென்ப தளைத்த வஞ்சீரா நடையவை குறளடி யிருசீர் சிந்தடி முச்சீ ரளவடி நாற்சீ ரைஞ்சீர் நெடிலடி கழிநெடிலடி யைந்தே கடந்த சீரிவற்று ளெண்சீர் மிக்கடி யெனிற்சிறப் பன்றே. | |