எ-ம், ஈற்றெழுத்தொன்றி வரத் தொடுப்பது இயைபுத்தொடை, எ-ம். இரண்டா மெழுத் தொன்றி வரத் தொடுப்பது எதுகைத்தொடை, எ-ம். மொழியானும் பொருளானு மறுதலைப் படத்தொடுப்பது முரண்டொடை, எ-ம். உயிரளபெடையும் ஒற்றளபெடையும் ஒன்றிவரத் தொடுப்பது அளபெடைத்தொடை, எ-ம். கொள்ளல்வேண்டும். இவற்றின் வகையும் விகற்பமும் 216-ம் சூத்திரத் தில் விளக்குதும். - யாப்பருங்கலம். - "தொடையே யடியிரண் டியை யத் தோன்றும். - ஆதி யெழுத்தே யடிதொறும் வரினடி, மோனைத் தொடையென மொழிமனார் புலவர். - இறுவா யொப்பினஃதியை பெனப்படுமே. - இரண்டா மெழுத்தொன் றியைவதே யெதுகை. - மொழியினும் பொருளினு முரணுதன் முரணே. - அளபெடை யொன்றுவ தளபெடைத் தொடையே." இவை மேற்கோள். எ-று. (11) | 213. | மோனைக் கினமே அஆ ஐஒளவும் இஈ எஏவும் உஊ ஒஓவும் சதவும் ஞநவும் மவவுமெனவே. | | (இ-ள்.) மோனைத் தொடைக் கோர் சிறப்பிலக்கண மாமாறுணர்த் துதும். மோனையாவதற் கடிமுதற்கண்ணே வந்த முதலுயிரெழுத்து முயிர் மெய்யெழுத்து மீண்டுவரத் தொடுப்பது மோனையாம். அவ்வவ் வெழுத்துத்தானே வரினும் அவற்றவற் றினுவெழுத்து வரினு மிழுக்கா. மோனை யாவதற் கெழுத்தினமாவன:- அ, ஆ, ஐ, ஒள, என்னு மிந்நான்கு மொன்றற்கொன்று மோனையாம். இ, ஈ, எ, ஏ, என்னு மிந்நான்கு மொன்றற் கொன்று மோனையாம். உ, ஊ, ஒ, ஓ, என்னு மிந்நான்கு மொன்றற்கொன்று மோனையாம். இவை யுயிரழுத்தினம். அன்றியும், சதவும், ஞநவும், மவவும், ஒன்றற்கொன்று மோனையாம். இவை யுயிர்மெய் யெழுத்தினம். (வ-று.) ஒளவைக்குறள். - "அண்ணாக்குத் தன்னையடைத்தங் கமுதுண்ணில், விண்ணோர்க்கு வேந்தாய் விடும். - ஆதி யொளியாகி யாள்வானுந் தானாகி, யாதி யவனுருவமாம். - ஐயைந்து மாயா லகத்தி லொளிநோக்கிற், பொய்யைந்தும் போகும்புறம்." - நிகண்டு. - "ஒளவையம்மனை பயந்தாளம்மையே யாயே யன்னை - இராப்பக லன்றி யிருசுடரைச் சிந்திக்கில், பராபரத் தோடொன்றலுமாம். - ஈசனோ டொன்றி லிசையாப் பொருளில்லைத், தேச விளக்கொளியே யாம். - எள்ளகத்தி லெண்ணெ யிருந்தவா றொக்குமே, யுள்ள கத்தி லீசனிலை. - ஏறு மதிய மிறங்கி லுறங்கிடுங், கூஉறும் பூரணை யாங்கோள். - உடம்பினாற் பெற்றபய னாவதெல்லா, முடம்பினி லுத்தமனைக் காண். - ஊறு மமுதத்தை யுண்டங்குறப் பார்க்கின், மாறும் பிறப்பறுக்கலாம். - ஒருவற் கொருவனே யாகு முயிர்க்கெல்லா, மொருவனே பல்குண முமாம். - ஓசை யுணர்வுக ளெல்லாந் தருவிக்கு, நேசத்தா லாய வுடம்பு." இவைமுறையே வுயிரெழுத் தினமோனை வந்தவாறறிக. அன்றியும், (வ-று.) |
|
|