"சங்கு நிறம்போற் றவளவொளிகாணி, லங்கையி னெல்லிய தேயாம். - ஞான மாசார நயவா ரிடைப்புகலு, மேனை நூல்வேத மிருக்கு நெறி. - மதியொடு காலும் வன்னியொன் றாகவே, கதிரவனா மெனவே காண்." இவை யுயிர்மெய் யெழுத்தின் மோனைவந்த வாறறிக. அவ்வவ் வுயிரெழுத்திற்குக் கூறிய மோனையே அவ்வவ் வுயிரேறிய அவ்வவ் வுயிர்மெய் யெழுத்திற்கு மாமெனக் கொள்க. மோனை - அனு - என்பன வொருபொருள். இம்மோனையே வருக்கமோனை, நெடின்மோனை, வல்லினமோனை, மெல்லினமோனை, இடையின மோனை, தலையாகுமோனை, இடையாகுமோனை கடையாகுமோனை, இரண்டாமடிமோனை, விட்டிசை மோனை, எனப் பலவகைப்படும். (வ-று.) பகலே பல்பூங் கானற் கிள்ளை யோப்பியும், பாசிலைக் குழவி யொடு கூதாளம்விரைஇப்,பின்னும் பிணியவிழ்ந்த நன்னெடுங் கூந்தல், பீர்ங்கப் பெய்து தேம்படத் திருத்திப், புனையி ரோதி செய்குறி நசைஇப், பூந்தார் மார்ப்புனத்துட் டோன்றிப்,பெருவரை யடுக்கத் தொருவே லேந்திப், பேயு மறியாமா வழங்கு பெருங்காட்டுப்,பைங்க ணுழுவைப் படுபகை வெரீஇப்,பொருது சினந்தணிந்த பூணுத லொருத்தல், போது தரவழங்கு மாரிருண் டுநாட், பௌவத் தன்ன பாயிரு ணீந்தி,யிப்பொழுது வருகுவை யாயி, னற்றார் மார்பதிணடலங்கதுப்பே." இஃது,பகரமெய்வருக்கமோனை. - "ஆர் கலியுலகத்து மக்கட் கெல்லா, மோதலிற் சிறந்ததன் றொழுக்கமுடைமை." இஃது நெடின்மோனை. - "கயலே ருண்கண்கலுழநாளுஞ், சுடர்புரைதிருநுதல் பசலை பாயத், திருந்திழை யமைதோ ளரும்பட ருழப்பப், போகல்வாழியைப் பூத்த கொழுங்கொடி யணிமலர் தயங்கப், பெருந்தண்வாடை வரூஉம் பொழுதே." இஃது வல்லினமோனை. இவ்வாறே மெல்லின மோனையும் இடையினமோனையும் வருவதறிக. - "பற்றுக பற்றற்றான் பற்றினையப் பற்றைப், பற்றுக பற்று விடற்கு." - இஃது தலையாகுமோனை. - "மாவும் புள்ளும் வதிவயிற் படர, மானீர்விரிந்த பூவுங்கூம்ப, மாலைதொடுத்த வாடை, மாயோ ளின்னுயிர்ப் புறத்திறுத் தற்றே." இஃதிடையாகுமோனை. "பகலே பல்பூங் கானல்." இஃது கடையாகுமோனை. - உபதேசகாண்டம். - "ஊறு மாமறை யோதிய தத்தையே,யூறு மாமறை யோதிய தத்தையே,நாறு பூமலர் நந்தவனங்களே, நாறுபூமலர் நந்தவனங்களே." இஃதிரண்டடிமோனை. "அஅவனும் இஇவனுங் கூடியக்கால் எஎவனை வெல்லா ரிகல்." இஃது விட்டிசைமோனை. பிறவுமன்ன. (12) | 214. | எதுகை யென்ப வியைபன மொழிகண் முதலெழுத் தளவொத்து முதலொழித் தொன்றுத மூன்றா மெழுத்தொன்ற லாசினந் தலையா கிடைகடை யாறு மெதுகை வகையே. | | (இ-ள்.) எதுகைத் தொடைக்கோர் சிறப்பிலக்கண மாமாறுணர்த்துதும். இரண்டா மெழுத்தொன்றி வரத்தொடுப்ப தெதுகை யெனப்படும். ஆயினு |
|
|