முதற் றொடைக்கண் ணொருசீரு மிரண்டாந் தொடைக்கண் ணிருசீரு மொன்றித் தொடுத்தவாறு காண்க. - விருத்தம். - "யானையெழுங்கட லேந்திய தேர் பரிகாற், சேனை யெழுங்கடல் சென்றுசெழுங் கடன்மே, லேனை யெழுங்கடன் மோதலெனப் பகைவர், தானையெழுங்கழ லோடுதலைப்படுமால்.' எனவும், 'காமமே பறவைத் தேர்மேற் கசடெனும் பாலைச் சேர்ந்தாள், வீமமே பறவைத் தேர்மேல் விளைதவக் குறிஞ்சி ஞான, வாமமே பறவைத் தேர்மேல் வளரற முல்லை சேர்ந்தென், னாமமே பறவைத்தேர்மே னயப் பவா னாட்டைச் சேர்வாள்." எனவும், நான்கடிக்கண் ணிருசீரு முச்சீரு மொன்றித் தொடுத்தவாறு காண்க. பிறவுமன்ன. அன்றியு மிரண்டாமெ ழுத்தொன்றே மாறாது தொடுத்துவருவ திடையாகெதுகை யெனப்படுவம். (வ-று.) குறள். - "அகர முதல வெழுத்தெல்லா மாதி, பகவன் முதற்றே யுலகு." எ-ம். அன்றியு முதற்சீர்க் கடையெழுத் தொன்றே மாறாது தொடுத்து வருவது கடையாகெதுகை யெனப் படும். (வ-று.) எச்சத்தா - ரென்றதற்கு - சுற்றத்தா - ரெனவும், பரியா - வென்றதற்கு - மணியா - லெனவும், பிறவுங் கடையாகெதுகை. ஆயினு மிது சிறப்பன்று. எ-று. (14) | 216. | மோனை முதலடி முதல்வரி னடியே யிணைவ திணையே யிடைவிடல் பொழிப்பே யிறுவ தோரூஉ வீறொன் றொழிவது கூழை முதலயல் குன்றன் மேற்கதுவா யீற்றய லொன்றொன் றாதெனிற் கீழ்க்கதுவா யெல்லா மொன்று வதெனின் முற்றென்ப. | | (இ-ள்.) இனித் தொடைவிகற்ப மாமாறுணர்த்துதும். மேற்கூறிய மோனை, இயைபு, எதுகை, முரண், அளபு, என வைந்தொகையும் ஒவ்வொன் றெண்வகைப் படுமெனக் கொள்க. இவற்றை, 218-ஞ் சூத்திரத்திற் காண்க. அவற்றுள் அடிதோறு முதலெழுத் தொன்றி வரத் தொடுப்பது அடிமோனைத் தொடையும், அடிதோறு மிறுதிக்கண் ணெழுத் தோன்றி வரத்தொடுப்பது அடியியைபுத் தொடையும், அடி தோறு மிரண்டா மெழுத்தொன்றி வரத்தொடுப்பது அடியெதுகைத்தொ டையும், அடிதோறு முதற்கண் மொழியானும் பொருளானு மறுதலைப்ப டத் தொடுப்பது அடிமுரண்டொடையும், அடிதோறு முதற்கண் ணுயிர ளபெடையு மொற்றளபெடையு மொன்றிவரத் தொடுப்பது அடியளபெ டைத் தொடையு மெனப்படும். - 'முதலெழுத் தொன்றின் மோனை யெதுகை முதலெழுத் தியைபோ டொத்தது முதலா, மஃதொழித் தொன்றினாகு மென்ப." என்றார் பல்காயனார். - "இறுவா யொப்பி னஃதியைபென மொழிப." என்றார்கையனார். - "மொழியினும் பொருளினு முரணுதன் முரணே." என்றா ரொல்காப் பெருமைத்தொல்காப்பியனார். - "அளபெடைத் தொடைக்கே யளபெடை யொன்றும்." என்றார் நற்றத்தனார். (வ-று.) "மாவும் புள்ளும் வதிவயிற் படர, மானீர் விரிந்த பூவுங்கூம்ப, மாலைதொடுத்த கோதையுங் கமழ, |
|
|