கொடி யலரிறாச், சுவை யொருங் கமைகனி சுமந்துயர் நிமிரவும், பெருந்திருக் கலாபப் பீலிகளாடு, மருந்திருக் காவலூ ரகத்துக் கண்டேன், கண்டுளம் பிணித்துகுங் கனிதே, னுண்டுளம் பிரிவினி யூழியுமரிதே." இப்பன்னீரடி யகவலுண் முதலேழடிக்கண் முறையே இணைமோனை, பொழிப்பு மோனை, ஒரூஉமோனை, கூழைமோனை, மேற்கதுவாய் மோனை, கீழ்க்கதுவாய்மோனை, முற்றுமோனை, என வெழுவகைமோனையும் வந்தவாறறிக. - "மொய்யுளங் குளிர்க்கு முகிலே பொழிலே, பெய்யுள மயிலே பேர்க்கு நிழலே, வில்லே யேந்திய விதுவதி கழலே, யெல்லா ரெல்லே யியலே யுடலே, வெயிலே வயலே மின்றவழ் குழலே,குயிலே நிகராக் குரலே சொல்லே, மயிலே யியலே மயலே, விகலே, யிவ்வுரு விங்ஙன மெய்தலி, னெவ்வுயி ரனைத்து மின்னுயி ராயவே." இதனு ளிணை யியைபு முதலாகிய வெழு வகை யியைபும் வந்த வாறறிக. ஈற்றெழுத்தொன்றி மீண்டு வருவதியை பென்றாகையி லிதற் கடியீற்றின்கண் வந்தசீர் முதற் சீராகக்கொண்டு வரும் புனற்கெதிரே போவதுபோன் மூன்றாஞ்சீ ரிரண்டாஞ் சீராகவு மிரண்டாஞ்சீர் மூன்றாஞ்சீராகவு முதற்சீர் நான்காஞ் சீராகவுங் கொள்க. "பொன்னி னன்ன பொறிசுணங் கேந்தி, பன்னருங் கோங்கி னன்னலங்க வற்றி, மின்னவி ரொளிவடந் தாங்கிமன்னிய, நன்னிற மென்முலை மின்னிடை வருத்தி, யென்னையு மிடுக்கண் டுன்னிவித் தின்னடை, யன்னமெ ன்பெடைபோ லப்பன்மலர்க் கன்னியம், புன்னையி னீழற் றுன்னிய, மயிலோ சாயல் வாணுத, லயில்வேலுண்க ணெம்மறிவு துலைத்தனவே." இதனு ளிணையெதுகை முதலாகிய வெழுவகை யெதுகையும் வந்தவா றறிக. - திருக்காவலூர்க் கலம்பகவிருத்தம். - "ஆங்கமலத் தேங்கமலமாய் நிலாத், தாங்கவரு பாங்கவரு தாளெழீஇ, நீங்கவலை யாங்கவலை நீசவென், றீங்கு வகை நீங்குவகை சேர்ந்ததே". இதுவுமது. - "சீறடிப் பேரக லல்கு லொல் குபு, சுருங்கிய நுசுப்பிற் பெருவடந் தாங்கிக், குவிந்துசுணங் கரும்பிய கொங்கை விரிந்து, சிறிய பெரிய நிகர்மலர் கோதைதன், வெள்வளைத் தோளுஞ் சேயரிக் கருங்கணு, மிருக்கையு நிலையு மேந்தெழி லியக்கமுந், துவர்வாய்த் தீஞ்சொலு முவந்தெனை முனியா, மென்று மின்னண மாகுமதி, பொன்றிகழ் நெடுவேற் போர்வல்லோயே." இதனுள் இணைமுரண் முதலாகிய வெழுவகை முரணும் வந்தவா றறிக. - "தாஅட் டாமரை மலருழக் கிப், பூஉக் குவளைப் போஒதருந்திக், காஅய்ச் செந்நெற் கறித்துப் போஒய், மாஅத் தாண்மோஒட் டெருமை, தேஎம் புனலிடை சோஒபான, மீஇனா அர்ந் துகளுஞ், சீஇரோஎராஅர்நீ இணீஇரூரன், செய்தகேண்மை, யாய் வளைத்தோழிக் கலரா னாவே." - இதனு ளிணையளபெடை முதலாகிய வெழுவகை யளபெடையும் வந்தவா றறிக. எ-று. (15) | 217. | அந்தாதி யடிக்கடை யாதி யாத லிரட்டை முழுதோ ரிறையடிக் கியவடி செந்தொடை தொடையொன்றுஞ் சேரா வடியே. | |
|
|