மிகலுமாம். இம்மூவிகார மன்றியுஞ் சிலமுறை இருபத மொருப தமாகத் திரண்டு கலப்புழிச் சிலவெழுத்து அவ்வழி விகாரப்படு மெனக்கொள்க. இவற்றுள், திரிதல் = ஆதேசம், எ-ம். கெடுதல் = உலோபம், எ-ம். மிகுதல் = ஆகமம், எ-ம். கலத்தல் = சங்கீரணம், எ-ம். வடமொழி யானே வழங்கும். தொகைப்படச் சொன்ன இந்நாலெழுத்தின் விகாரம் வகைப்பட விளங்குதற் கல்வழிப் பொருளும் வேற்றுமைப் பொருளும் விளக்கல் வேண்டும், எ-று. (1) | | 22. | அல்வழி வேற்றுமை யாமிரண்டவற்றுள் விரியினு முருபெடா வினைசார் பெயரே யல்வழிப் பொருட்பெய ராகுமென்ப வேற்றுரு பில்லது விரிக்குங் காலை வேற்றுமைக் கொளினது வேற்றுமைப் பொருளே. | | | (இ-ள்.) அல்வழியும் வேற்றுமையு மாமாறுணர்த்துதும். வினைச்சொற் சார்ந்த முதற்பெயராகி விரியினும் வேற்றுமை உருபுபெறாதுநிற்கும் பெயரே அல்வழிப்பொருட்பெயர், எ-ம். முன்னேவேற்றுமை உருபு கொள்ளாதாயினும் விரிக்குங்காலை வேற்றுமை உருபு கொண்டுவரும் பெயரே வேற்றுமைப்பொருட்பெயர், எ-ம். கொள்க. விதியைவிளக்குதும். (உ-ம்) கல்லெடுத்தான், கல்வீடு, கல்லியல்பு என்பவற்று ளுருபுதோன்றாதாயினும் பொருளைவிரித்தாற் கல்லையெடுத்தான், கல்லாலாயவீடு, கல்லினதியல்பென் றவ்வுருபுகூட்ட வேண்டினமையால் இதிலே கல்லென்னுஞ்சொல் வேற்றுமைப் பொருட் பெயரெனப்படும். அவ்வுருபு தோன்றாமலுங் கூட்டாமலும் விரித்துரைக்கப்படும் பெயர் அல்வழிப்பொருட் பெயரெனப்படும். (உ-ம்) கல்சிறிது, கல்லுயர்ந்தது. இதிலே கல் என்னுஞ் சொல் அவ்வுரு பில்லாமையானும் பொருளை விரிக்க அவ்வுருபு கூட்ட வேண்டாமையானும் அல்வழிப் பொருட்பெய ரெனப்படும். அன்றியும் (உ-ம்.) பொன்னுடையான், என ஐ உருபு தொக்கியும்; பொன்னையுடையான், என விரிந்தும்; கல்லெறிந்தான், என ஆல் உருபு தொக்கியும்; கல்லா லெறிந்தான், என விரிந்தும்; கொற்றன் மகன் என கு உருபு தொக்கியும், கொற்றற்கு மகன்என விரிந்தும், மலைவீழருவிஎன இன் உருபு தொக்கியும்; மலையின் வீழருவிஎன விரிந்தும்; மலையினுச்சி என அது உருபுதொக்கியும்; மலையினது வுச்சி என விரிந்தும்; மலைமுழை என கண்ணருபுதொக்கியும் மலைக்கண் முழை என விரிந்தும்; வேற்றுமைப் புணர்ச்சி ஆறும்வந்தன. அன்றியும், (உ-ம்) கொல்யானை என வினைத்தொகையும், கருங்குதிரை என பண்புத் தொகையும், ஆயன்சாத்தன், சாரைப்பாம்பு என இருபேரொட்டுப் பண்புத்தொகையும், பொற்சுணங்கு என உவமைத்தொகையும், இராப்பகல் என உம்மைத்தொகையும், பொற்றொடி என அன்மொழித்தொகையும், |
|
|