| யெனவிம் மூன்று மியையத் தொடையும் விகற்பமு மெண்ணைந் தொருமூன் றென்ப. | | (இ-ள்.) மேலே வகுத்துரைத்த நாற்பதின் மூன்று தொடையுந் தொடை விகற்பமு மீண்டுத்தொகுத்துக் காட்டுதும். அடிமுத லெட்டுடனே மோனைமுத லைந்தினையுங் கூட்டியுறழ நாற்பதாகும். அவை வருமாறு:- அடிமோனை, இணைமோனை, பொழிப்புமோனை, ஒரூஉமோனை, கூழைமோனை, மேற்கதுவாய்மோனை, கீழ்க்கதுவாய்மோனை, முற்றுமோனை, எ-ம். அடியியைபு, இணையியைபு, பொழிப்பியைபு, ஒரூஉவியைபு, கூழையியைபு, மேற்கதுவாயியைபு, கீழ்க்கதுவாயியைபு, முற்றியைபு, எ-ம். அடியெதுகை, இணையெதுகை, பொழிப்பெதுகை, ஒரூஉவெதுகை, கூழையெதுகை, மேற்கதுவாயெதுகை, கீழ்க்கதுவாயெதுகை, முற்றெதுகை, எ-ம். அடிமுரண், இணைமுரண், பொழிப்புமுரண், ஒரூஉமுரண், கூழைமுரண், மேற்கதுவாய்முரண், கீழ்க்கதுவாய்முரண், முற்றுமுரண், எ-ம். அடியளபெடை, இணையளபெடை, பொழிப்பளபெடை, ஒரூஉவளபெடை, கூழையளபெடை, மேற்கதுவாயளபெடை, கீழக்கதுவாயளபெடை, முற்றளபெடை, எ-ம். வரும். அன்றியும், அந்தாதித்தொடை, இரட்டைத்தொடை, செந்தொடை, எ-ம். வரும். - யாப்பருங்கலப். - "மோனை யெதுகை முரணியை யளபெடை, பாத மிணையே பொழிப்போ டொரூஉத் தொடை, கூழை கதுவாய் மேலதூஉங் கீழதூஉஞ், சீரிய முற்றொடு சிவ ணுமா ரவையே." இதுமேற்கோள். எ-று. (17) | முதலாமோத்துச்செய்யுளுறுப்பு. - முற்றிற்று. | .............................. | இரண்டாமோத்துச்செய்யுளியல். Chapter II. - The kinds of Metre. | 219. | வெண்பா வகவல் விரிகலி வஞ்சி மருட்பா வெனவை வகைப்பா வன்றியுந் துறைதாழிசை விருத்தந் தூக்கின மூன்றே. | | (இ-ள்.) பாவும் பாவினமு மாமாறுணர்த்துதும். மேற்கூறிய வுறுப்பி னாற் பாவும் பாவினமு மாகும். இவையே வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, மருட்பா, எனப்பா வைவகையா மெனக்கொள்க. அன்றியும் துறை, தாழிசை, விருத்தம், என மருட்பா வொழித்தொழிந்த மற்றை நாற்பாவிற் கினமூன்று மெனவுங் கொள்க. ஆகையி லைவகைப்பாவு முந்நான் கினமுமாகச் செய்யுள்வகை யொருபதினேழென்பர். அவையாவன:- வெண்பா, வெண்டுறை, வெண்டாழிசை, வெளிவிருத்தம். எ-ம். ஆசிரியப்பா, |
|
|