- இலக்கணத் திரட்டு. - "இருகுறள் சவலை யொரு விகற் பாகும்." எ-று. (4) |
........................ |
ஆசிரியப்பா விலக்கணம் வருமாறு:- |
Asiriyappa. |
223. | ஆசிரி யத்தொலி யகவலா யியற்சீர் தன்றளை பிறவுந் தழுவிய வளவடி நடையா னடந்து நால்வகைத் தாமவை நேரிசை யிணைக்குற ணிலமண் டிலமே யடிமறி மண்டில மாகு மென்ப. | |
(இ-ள்.) நிறுத்த முறையானே ஆசிரியப்பா வியல்பும் விகற்பமு மாமாறுணர்த்துதும். ஆகையி லாசிரியப்பாவிற் கெல்லா மகவலோசை யாகு மென்றமையா லாசிரிய மெனினு மகவ லெனினு மொக்கும். அகவற் கெல்லாந் தனக்குரிச் சீராகிய வியற்சீரன்றி யொரோவிடத்து வெண்சீரும், தேமாங்கனி புளிமாங்கனி யென்னு மிடைநேரிசை வஞ்சிச்சீரும், குற்றியலுகரவீற்றப் பொதுச்சீரும் வரப் பெறும். அங்ஙனந் தன்றளை யன்றி வெண்டளையும் வஞ்சித்தளையுங் கலித்தளையு மயங்கி வழங்கும். அன்றியு மகவலெல்லா மளவடியா னடக்கு மாயினு மினிச்சொல்லும்படி யொரோ விடத்துக் குறளடியுஞ் சிந்தடியும் வரப்பெறும். அன்றியு நேரிசை யாசிரியப்பாவும், இணைக்குற ளாசிரியப்பாவும், நிலமண்டில வாசிரியப் பாவும், அடிமறிமண்டில வாசிரியப்பாவும், என வாசிரியப்பா விகற்ப நான்காகும். இவற்றிற் குதாரண மினிக் கூறுவதும். - யாப்பருங்கலம். - "அகவலிசையன வகவன் மற்றவை, ஏ ஓ ஈ ஆ யென வையென் றிறுமே. - நேரிசை யிணைக்குறண் மண்டில நிலைப்பெய, ராகு மண்டில மென்றகவ னான்கே." இவை மேற்கோள். எ-று. (5) |
224. | நேரிசைச் சிறுமை நேருமூ வடியே வரையா பெருமையே மற்றடி யளவடி யீற்றயற் சிந்தடி யியைந்து வருமே. | |
(இ-ள்.) நேரிசை யாசிரியப்பா வாமாறுணர்த்துதும். மூவடி குறை யாமற் பலவடி வந்து மற்றடி யளவடியாகி யீற்றய லடியே சிந்தடியாகவரப்பெறு மகவல் நேரிசை யாசிரியப்பா வெனப்படும். இதுவே பொதுப்பெ யராக விந்நாளி லகவ லென்று வழங்கும். இதற் குதாரணமாக இருநூற்றுப் பதினாறாஞ் சூத்திரத்திற் காட்டியவிரண் டகவல் காண்க. - யாப்பருங்கலம். - "அந்த வடியி னயலடி சிந்தடி, வந்தன நேரிசை யாசிரி யம்மே." இது மேற்கோள். எ-று. (6) |
225. | இணைக்குறண் முதலீற் றீரடி யளவடி யிடைக்குறள் சிந்தடி யிணையப் பெறுமே. | |