யானும் வந்து நான்கடி குறையா வெட்டடி மிகா வருமெனக் கொள்க. இதற்கு மினிவரு முதாரணங் காண்க. எ-று. (12) |
231. | அம்போ தரங்க மம்பளாந் திரைபோ லளவடி யீரடி யிரண்டும் பேரெண் ணளவடி யோரடி நான்கு மளவெண் சிந்தடி யோரடி யெட்டு மிடையெண் குறளடி யோரடி நானான்குஞ் சிற்றெண் ணெட்டு நானான்கு நான்கு மெட்டுமாய்ச் சுருங்கவு மந்நாற் றுணையுறுப் புடைத்தே. | |
(இ-ள்.) அம்போதரங்க மாமாறுணர்த்துதும். அம்போதரங்க மென்பது கரைசாரக் கரைசார வொருகாலைக் கொருகாற் சுருங்கிவரு நீர்த்தரங் கம்போல நாற்சீரடியு முச்சீரடியு மிருசீரடியுமாகப் பேரெண் ணளவெண் ணிடையெண் சிற்றெண்ணென நாலுறுப்போடு வருமென் றுணர்க. அவற்றுள்ளே யளவடி யீரடியாக விரண்டு வருவது பேரெண். அளவடி யோரடியாக நான்கு வருவ தளவெண். சிந்தடி யோரடியாக வெட்டு வருவதிடையெண். குறளடி யோரடியாகப் பதினாறு வருவது சிற்றெண் ணெனப்படும். இவற்றுள் ளெட்டும் பதினாறுமாக வருவன சுருங்கி நான்கு மெட்டுமாய் வரவும் பெறு மெனக் கொள்க. ஆயினுந் தரவு முதன் மேற் கூறிய வுறுப்பெலாந் தோன்ற வொவ்வொருதரவு மொவ்வொரு தாழிசையு மொவ்வோ ரெண்ணும் வண்ணக வராகமு மிவை யொன்றுந் தத்தம் பொருளே முகியத் தருதல் வேண்டு மெனக் கண்டுணர்க. இனி யிவற்றிற்கு முதாரணங் காண்க. (13) |
232. | சுரிதக மென்ப சுரிந்தெனக் கூனின் பின்னகவல் வெள்ளை யாக முடிவதே. | |
(இ-ள்.) சுரிதக மாமாறுணர்த்துதும். மேற்கூறிய வுறுப்பினுள் வர வேண்டுவற்றை வருவித் தொருசீரான் வருந் தனிச்சொல் வந்தபின் மூன்றடி முதலாய்ப் பலவடியான்வரு மகவலானே சுரிதகம் வந்து கலிப்பா வெல்லா முடியும். ஒரோவிடத்துச் சுரிதகம் வெண்பாவானும் வரப்பெறும். இனிவரு முதாரணங் காண்க. எ-று. (14) |
233. | நேரிசை யம்போ தரங்க வண்ணக மென்றொத் தாழிசை யிவைமூன் றிவற்றுட் டரவொன் றொருமுத் தாழிசை தனிநிலை சுரிதக மெனநாற் றுணைவரு நேரிசை தாழிசைக் கீழம்போ தரங்கஞ் சாரவு மம்போ தரங்கமே லராக மணையவு மம்போ தரங்கமே யாம்வண் ணகமாம். | |