17 | மூன்றாவதெழுத்தின்விகாரம் | கொற்றன் கொடுத்தான் என எழுவாய்த் தொடரும், கொற்றாகொள் என விளித்தொடரும், உண்ட சாத்தன் என பெயரெச்சத் தொடரும், உண்டு வந்தான் என வினையெச்சத்தொடரும், குண்டுகட்டெருமை எனக் குறிப்புவினை முற்றுத்தொடரும், உண்டான் சாத்தான் எனத் தெரிநிலைவினை முற்றுத்தொடரும், அதுமற்றம்ம என இடைச்சொற்றொடரும், நனிபேதை என உரிச்சொற்றொடரும், நெருப்பு நெருப்பு என அடுக்குத்தொடருங்கூடிய தொகைநிலை ஐந்தும்; தொகாநிலை ஒன்பதும்; ஆகிய அல்வழிப் புணர்ச்சி பதினான்கும் வந்தன. இவ்விருவழியிலும், தழாத் தொடருஞ் சிலவுண்டெனக்கொள்க. அவைவருமாறு. கைக்களிறு, எ-து கையையுடையகளிறு, என விரிக்கப்படுதலால் கை எ-து. களிறு என்பதைத் தழுவாமையால் இப்படி வருகின்றவைக ளெல்லாந் தழாத்தொட ராகிய வேற்றுமைப் புணர்ச்சியாம். சுரையாழ வம்மிமிதப்ப, எ-து. சுரை மிதப்ப, அம்மியாழ எனக்கூட்டப்படுதலால் சுரை எ-து. ஆழ என்பதையும் அம்மி எ-து. மிதப்ப என்பதையுந் தழுவாமையால் இப்படிவருகின்ற வைகளெல்லாந் தழாத்தொடராகிய அல்வழிப் புணர்ச்சியாம். (சொல்லில், வேற்றுமை யிலக்கணம் விரித்துக் கூறுதும்.) எ-று. (2) | | 23. | வலிவரின் மஃகான் வருக்கமாகு நவ்வரின் றனிக்குறின் மவ்வுநவ்வா மவ்வழியன்றி மகரங் கெடுமே. | | | (இ-ள்.) மகரவிகார மாமாறுணர்த்துதும். ஈற்றுமகரத்தின்கீழ் க ச த மொழிக்கு முதல்வரின் இவற்றிற்கினவெழுத்தாக மகரந் திரிந்து முறையே ங், ஞ், ந், என அதற்கதற்கு வருக்க வெழுத்து வருமெனக் கொள்க. (உ-ம்.) மனம் + களித்தது = மனங்களித்தது, எ-ம். மனம் + சலித்தது = மனஞ்சலித்தது, எ-ம். மனம் + தளர்ந்தது = மனந்தளர்ந்தது, எ-ம். பிறவுமன்ன. அன்றியும், ஈற்று மகரத்தின்கீழ் நம்முதல் வந்தால் அம்மகரங்கெடும். (உ-ம்.) மனம் + நலம் = மனநலம், எ-ம். முகம் + நிறம் = முகநிறம், எ-ம். பிறவுமன்ன. அன்றியு மகரவீற்றுமொழி தனிக்குறிலாயின் மகரந்திரிந்து நகரமாம். (உ-ம்.) வெம் + நீர் = வெந்நீர், எ-ம். செம் + நெல் = செந்நெல், எ-ம். பிறவுமன்ன. எ-று. (3) | 24. | ண ன முன்தகரம் ட ற வாமுறையே ண ன வல்வழிக்கென்று மியல்பாம் வேற்றுமைப்பொருட்கவை வலிவரின் ட ற வாம் ண ன முன்குறில்வழி நகரம் ண ன வா மற்றது ண ன முன்மாய்ந்து கெடுமே. | | (இ-ள்.) ணகார னகாரங்களால் வரும் விகாரமாமாறுணர்த்துதும். ஈற்றுணகரத்தின்கீழ் மொழிமுதல்வரும் தகரந்திரிந்து டகரமாகவும், ஈற்றுணகரத்தின்கீழ் |
|
|