மிருமறை யருளினை." இது அராகமாகையின் மேல்வந்த வுறுப்புக்களன்றித் தாழிசைக்கு மம்போ தரங்கத் திற்குநடுவே யிவை யிசைப்புழி வண்ணக வொத்தாழிசையா மெனக்கொள்க. ஆகையின் முறையே யொத்தாழிசைக் கலிப்பா விகற்ப மூன்றும் வந்தவாறு காண்க. - யாப்பருங்கலம். - "நேரிசை யம்போ தரங்கம் வண்ணமென், றோதிய மூன்றே யொத்தா ழிசைக்கலி. - தரவொன்று தாழிசை மூன்றுஞ் சமனாய்த், தரவிற் சுருங்கித் தனிநிலைத் தாகிச், சுரிதகஞ் சொன்ன விரண்டினு ளொன்றாய், நிகழ்வது நேரிசை யொத்தா ழிசையே. - முந்திய தாழிசைக் கீறாய் முறைமுறை, யொன்றினுக் கொன்று சுருங்கு முறுப்பின, தம்போ தரங்க வொத்தா ழிசைக்கலியே. - அவற்றொடு முடுகிய லடியுடை யராக மடுப் பது வண்ணக வொத்தா ழிசையே." இவை மேற்கோள். எ-று. (15) | 234. | கொச்சகக் கலியைங் கூறு பாடெனத் தரவே தரவிணை தாழிசை சிலபல சிலபிறழ்ந் துறழ்ந்துஞ் சிலமயங் கியுமாம். | | (இ-ள்.) கொச்சகக் கலிப்பா விகற்ப முணர்த்துதும். அவையே தரவுக் கொச்சகக் கலிப்பா, எ-ம். தரவிணைக் கொச்சகக் கலிப்பா, எ-ம். சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா, எ-ம். பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா, எ-ம். மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா, எ-ம். கொச்சகக் கலிப்பா விகற்ப மைந்தெனக் கொள்க. | இவற்றுள், தரவுக் கொச்சகக் கலிப்பா வருமாறு- நான்கடி தரவு தனிச்சொற் சுரிதக மென விம்மூன் றுறுப்பாக வருவன தரவு கொச்சகக் கலிப்பா வெனப் படும். இதுவே தனிச்சொற் சுரிதக மின்றியும் வருமெனக் கொள்க. (வ-று.) "செல்வப் போர்க்கதக் கண்ணன் செயிர்த்தெறிந்த சினவாளி, முல்லைத்தார் மறமன்னர் முடித்தலையை முருக்கிப்போ, யெல்லைநீர் வியங்கோண்மு விடைநுழையு மதியம்போன், மல்லலோங் கெழில்யானை மருமம்பாய்ந் தொளித்ததே." எனக் கலித்தளையாய் நான்கடித்தரவு தனிச் சொற் சுரிதகமின்றி வந்தவாறு காண்க. | அன்றியும், தரவிணைக் கொச்சகக் கலிப்பா வருமாறு:- தரவு தனிச் சொற்றரவு தனிச்சொற் சுரிதகமாக வருவன தரவிணைக் கொச்சகக் கலிப்பா வெனப் படும். (வ-று.) "வடிவுடை நெடுமுடி வானவர்க்கும் வெலற்கரிய, கடிபடு நறும்பைந்தார்க் காவலர்க்குங் காவலனாங், கொடிபடுவரை மார்பிற் கூடலாற் கோமானே." தரவு. எனவாங்கு - தனிச்சொல். "துணைவளைத் தோளிவன் மெலியத் தொன்னலந் தொடர்புண்டாங், கிணைமலர்த்தா ரருளுமே லிதுவிதற் கோர்மா றென்று, துணைமலர் தடங்கண் ணார்துணை யாகக் கருதாரே." தரவு. அதனால் - தனிச்சொல். "செவ்வாப் பேதை யிவ டிறத், தெவ்வா றாங்கொ, லிஃதெண்ணிய வாறே." இஃதுஇடை யிடை யே தனிச்சொற் பெற்றாசிரியச் சுரிதகத்தான் முடிந்த தென்றறிக. |
|
|