| குறையா மூன்றன் மேற்கூறில் பெருகத் தனிச்சொல்லு மகவலுந் தழுவலோ டிறுமே. | | (இ-ள்.) நிறுத்த முறையானே வஞ்சிப்பா வாமாறுணர்த்துதும். ஆகையிற் றூங்கலோசையான் வரும் வஞ்சிப்பாவிற்கெல்லாம் வஞ்சிக்குரிச்சீ ரென நிரையீற்ற மூவசைச்சீரும், பிறவுந் தனக்குரிய விருவகைத் தளையும், பிறவு மேற்பன. அன்றியும் வஞ்சியெல்லாங் குறளடியானுஞ் சிந்தடியானு நடக்கும். இங்ஙன நடப்புளி மூவடி சிறுமை யெனவும் பெருமைக்கோர்வ ரையில்லை யெனவுங் கொள்க. அன்றியு மூவடியானும் பலவடியானு நடந்து தனிச்சொற் பெற்றுப் பலவடியான் வரு மகவல்கூடி யாசிரியச் சுரிதகத் தான்முடியும்வஞ்சிப்பாவென் றுணர்க. - "தூங்கலிசையன வஞ்சிமற்றவை யாய்ந்த தனிச்சொலோ டகவலி னிறுமே." என்பதியாப்பருங்கலம். (வ-று.) திருக்காவலூர்க் கலம்பகம். - "சீர்விளக்கிய செல்வியாய்ப், பார்விளக்கிய பாவையே, தென்காவிரி திரண்டொலிப்ப, மன்காவிரி மலர்கமழ்ப், பூந்தாதகி புடைநிழற்றத், தீந்தாதகிற் றினைக்குளிர்ப்ப, வருட்காவலூர்ந் தமைந்தளிப்பத், திருக்காவலூர் சேர்ந்தனளே, சேர்ந்தபின், னானே பூண் பழிநைய வெண்மதி, தானேபூண் பதந்தான் றாராளோ, திருவடியொளியுளந் தெளிவுறக்கண்டாற், கருவடி யிருளறக் கண்டு, மருவடி மலரடி வான்கதி யந்தமே." என விது குறளடி வஞ்சியாய் சேர்ந்த பின்னென்னுந் தனிச்சொற்பெற் றகவற் சுரிதகத்தோடு முடிந்தவாறு காண்க. எ-று. (19) | ................... | மருட்பாவிலக்கணம்வருமாறு:- | Marutpa. | 238. | மருட்பா வெள்ளை வந்தபின் னகவ லீற்றின் மருளு மியல்புடைத் தென்ப. | | (இ-ள்.) நிறுத்தமுறையானே மருட்பா வாமாறுணர்த்துதும். வெண்பா பலவடியாக முதற்கண் வந்தபின் னகவலிறுதியாக மருண்டுதொடுப்பது மருட்பா வெனப் படும். - "வெள்ளை முதலா வாசிரிய மிறுதிக், கொள்ளத்தொடுப்பது மருட்பா வாகும்." என்றார் காக்கைப்பாடினியார். (வ-று.) - திருக் காவலூர்க்கலம்பகம். - "வைக லெனவந்து மன்னுயிரார் கங்குலறும், வைகலைச் செய்தே யொளியோன் வாய்த் துயிர்த்தே, வைகினாள், காவலூருறை, காதலார்துறை, யோவலீர்கிளி, யோதியாரொளி, தெளித்தநூலி, திறத்த சீலி, களித்தமாலை, கயத்தவேலை, மந்திரமறைமொழி, மண்டலகுறை யொழி, சந்திரவடியினள், சந்துடுமுடியினள், காதனாயகிகதிதரும், வேத நாயகிமெல்லடிபணிவமே." ஆகையின் வெள்ளையகவல் கலிவஞ்சிமருட்பாவென வைம்பாவு மவற்றின் விகற்பமும் வந்தவாறு காண்க. எ-று. (20) |
|
|