பாவினம்வெண்டுறையிலக்கணம்வருமாறு:- Supplemental Metres. |
239. | துறைதாழிசை விருத்தந் தூக்கின மூன்றனுள் வெண்செந் துறைகுறள் வெண்பா வினமாய்ச் சீர்தளை யடியெலாஞ் சேர்ந்து விரவினு மொத்தடி யிரண்டா யொழுகு மற்ற வெண்டுறை யன்னவை விரவினு மூன்றடி யாதி யேழடி யந்தமா யீற்றிற் சிலவடி தஞ்சீர் சிலகுறைந் திறுமே. | |
(இ-ள்.) நிறுத்த முறையானே பாவினத்தியல்பும் விகற்பமுமுண ர்த்துதும். மருட்பா வொழித் தொழிந்த நால்வகைப் பாவினமாகத் துறை யுந் தாழிசையும் விருத்தமுமென மும்மூன்றும் வருமென்றுணர்க. அவற்றுட் டுறையே விளங்குமாறு:- குறள் வெண்பா வினமாக வருந்துறை வெண்செந்துறை யெனவுஞ் செந்துறை வெள்ளை யெனவும் வழங்கும். இவையே யெச்சீரானு மெத்தளையானு மெவ்வடியானுந் தம்முளொத்த விரண்டடியாக வரப்பெறும். - "ஒழுகிய வோசையி னொத்தடி யிரண்டாய் விழுமிய பொருளது வெண்செந் துறையே." என்ப தியாப்பருங்கலம். (வ-று.) "மீனே வேய்ந்த செல்வி மெல்லடி, நானே யேத்தி நாளுஞ் சூடுவேன்." எ-ம். அன்றியு மற்றவெண்பா வினமாய் வருந்துறை வெண்டுறையே யெனப்படும். இவையே யெச்சீரானு மெத்தளையானு மெவ்வடியானு மூன்றடி குறையாமலு மேழடி மிகாமலு மீற்றுச் சிலவடி சிலசீர் குறைந்து வருமெனக் கொள்க. - "மூன்றடி முதலா வேழடி காறும்வந், தீற்றடி சில சில சீர்தவ நிற்பினும், வேற்றொலி விரவினும் வெண்டுறை யாகும்." என்ப தியாப்பருங்கலம். (வ-று.) "மீனாருங் கொடிமுன்ன பின்முர சார்த்தொலி துவப்ப மிடைந்த வானோர், கானாரு மதுப்பூவும் பூம்புகையுங் காட்டியுளங் களித்து வாழ்த்தப், பானாருங் கதிரிமைப்ப பனிமுகிற் றேருந்தி, வானாரு மரசியுன் மகனேறிச் சென்றான்." என நான்கடியா யீற்றடியிரண்டு மிரண்டுசீர் குறைந்துவந்த வெண்டுறை யிதுவெனக் காண்க. எ-று. (21) |
....................... |
ஆசிரியத்துறையிலக்கணம்வருமாறு:- |
Asiriyatturei. |
240. | ஆசிரி யத்துறை யளவி சீர்வரு மடிநான் கீற்றய லாதி குறைநவு மிருவழி யிடைமடக் கினவுநால் வகைய. | |
(இ-ள்.) ஆசிரியத்துறை யாமாறுணர்த்துதும். ஆசிரியப் பாவினமாய் வருந்துறை சீர்வரையறை யில்லாது நான்கடியாய் வந்து நால்வகைப்படும். |