ஆகையிலீற்றயலடி குறைந்து வருவனவு மீற்றயல் குறைந் திடைமடக்காய் வருவனவு முதலு மீற்றயலு மிடையிடை குறைந்து வருவனவு மிடையிடை குறைந் திடைமடக்காய் வருவனவு மிந்நால்வகையு மாசிரியத்துறை யெனப் படும். - "கடையத னயலடி கடைதபு நடையவு, நடுவடி மடக்காய் நான்கடி யாகி, யிடையிடை குறைநவு மகவற் றுறையே." என்ப தியாப்பருங்கலம். (வ-று.) "பனிக்கால மெக்காலம் பட்டாற்றா யென்றன்றோ, வினிக்காதல் களித்துவப்ப விளைவேனில் வாராதோ வென்றனை நெஞ்சே, யினிக்காதல் களித்துவப்ப விளைவேனில் வந்தகன்று, துனிக்கால முதிர்வேனிற் சுடச்சுடவந் துற்றதினி யென்செய்வாய் நெஞ்சே." எனவிரண்டாமடியு நான்காமடியு மாறுசீரான்வந்து முதலுமீற்றயலு நாற்சீராகி யிடையிடை குறைந்து மிடைமடக்காகியும் வந்த வாசி ரியத்துறை. (வ-று.) "வண்டுளர் பூந்தார் வளர்கெழு செம்பூட்சேய் வடிவே போலத், தண்டளிர்ப் பிண்டித் தழையேந்தி மாவினவித் தணந்தோர் யாரே, தண்டளிர்ப் பிண்டித் தழையேந்தி வந்துநம், பண்டைப் பதிவினவிப் பாங்குபட மொழிந்து படர்ந்தோ ரன்றே." இது நான்கடியா யீற்றய லடிகுறைந் திடைமடக்காய் வந்த வாசிரியத்துறை. (வ-று.) - "கொன்றார்ந்த மைக்குரு முகத்தெழினிற் குருதிக் கோட்டின விருந்தாட் பெருங்கைக், குன்றாமென வன்றாமெனக் குமுறா நின்றன கொடுந்தொழில் வேழம், வென்றார்ந் தமைந்த விளங்கொளி யிளைம்பிறை துளங்கு வா ளிலங்கயிற் றழலுளைப் பரூஉத்தா ளதிரும்வா னெனவே திருங்கூற் றெனச் சுழலாநின்றன சுழிகண் யாளி, சென்றார்ந் தமைந்த சிறுநுதி வள்ளுகிர்ப் பொறியெருத் தெறுழ்வலிப் புலவுநா றழல்வாய்ப் புனலாமெனக் கனலாமெனப் புகையா நின்றன புலிமா னேற்றை, யென்றாங் கிவையியங்கலி னெந்திறத் தினிவரல் வேண்டலந் தனிவர லெனத்தலை விலக்கலி னிறுவரை மிசையெறி குறும்பிடை மிதுவென் னெவதுவெனார் கரவிர விடைக்களவுள மதுகற்றோ ரதுகற் பன்றே." இது நான்கடியாய் முதல டியு மூன்றாமடியும் பதினாலுசீரா யல்லாத வடியிரண்டும் பதினாறுசீரா யிடையிடை குறைந்து வந்த வாசிரியத்துறை. (வ-று.) "இரங்கு குயின் முழவா வின்னிசை யாழ்தேனா, வரங்கமணி பொழிலா வாடும் போலு மிளை வேனி, லரங்கமணி பொழிலா வாடு மாயின், மரங்கொன் மணந்தகன்றார் நெஞ்சமென் செய்த திளைவேனில்." இது நான்கடியதா யிடை யிடை குறைந் திடைமடக்காய் வந்த வாசிரியத்துறை. எ-று. (22) | ................... | கலித்துறை யிலக்கணம்வருமாறு:- | Kalitturei. | 241. | கலித்துறை நெடிலடி நான்கொத் தவற்று ளிடைநேர் வெண்சீ ரியற்சீர் முதனான் | |
|
|