மொழிமுதல்வரும் தகரந்திரிந்து றகரமாகவும் பெறும். (உ-ம்.) கண் + திறந்தது = கண்டிறந்தது, எ-ம். மின் + தெளிந்தது = மின்றெளிந்தது. எ-ம். பிறவுமன்ன. அன்றியும், ணனவீற்றுமொழிகள் அல்வழிப் பொருட்புணர்ச்சியில் நகரமொழிந்த எவ்வின வெழுத்துவரினும் திரியாதியல்பாம். (உ-ம்.) மண்கடிது, மண்சிறிது, மண்டீது, மண்பெரிது, மண்ஞான்றது, மண்மாண்டது, மண்யாது, மண்வலிது எ-ம். பொன்கடிது, பொன்சிறிது, பொன்றீது, பொன்பெரிது, பொன்ஞான்றது, பொன்மாண்டது, பொன்யாது, பொன்வலிது எ-ம். வரும். ஆயினும் உருபினாற் றோன்றாமற் பொருளினால் வேற்றுமையினால் வரும் ஈற்றுணனவின் கீழ் மொழிமுதல் வல்லினம் வரின் ணகரம் டகரமாகவும் னகரம் றகரமாக வுந்திரியும். (உ-ம்.) மண்+குடம் = மட்குடம், மண் + சாடி = மட்சாடி மண் + தாழி = மட்டாழி, மண் + பானை = மட்பானை, எ-ம். பொன் + குடம் = பொற்குடம், பொன் + சாடி = பொற்சாடி, பொன் + தாழி = பொற்றாழி, பொன் + பானை = பொற்பானை, எ-ம். பிறவுமன்ன. அன்றியும், ணனவீற்று மொழிகள் தனிக்குறிலாயின் மொழிமுதல் வரும் நகரந்திரிந்து றையே ணகர னகரமாகும். (உ-ம்.) கண் + நெடிது = கண்ணெடிது, எ-ம். மின் + நெடிது = மின்னெடிது, எ-ம். வரும். அன்றியும், ணன வீற்று நிலைப்பதங்கள் தனிக்குறி லல்லாதாயின் மொழிமுதல் வரும் நகரங் கெடும். (உ-ம்.) கவண் + நெடிது = கவணெடிது, எ-ம். கலன் + நெடிது = கலனெடிது, எ-ம். தூண் + நெடுமை = தூணெடுமை, எ-ம். மான் + நெடுமை = மானெடுமை, எ-ம். பிறவுமன்ன. - நன்னூல். "ண ன வல்லினம் வரட்டறவும் பிறவரி னியல்புமாகும். வேற்றுமைக் கல்வழிக் கனைத்து மெய்வரி னுமியல்பாகும்மே," எ-து. மேற்கோள். எ-று. (4) | | 25. | தேனெனுமொழிமெய் சேரிருவழியுந் தானியல்பாமெலிவரின் றன்னீற்றழிவும் வலிவரினீறுபோய் வலிமெலிமிகலுமா மின்பின்னுவ்வுறில் வன்மையுமிகுமே யென்றன்வலிவரி னியல்புந் திரிபுமா நின்னென்றுமியல்பாய் நிற்குமென்ப வூன்குயினியல்பா முற்றவேற்றுமைக்கு மெகின்மரமல்லதே விருவழியியல்பு மவ்வுறிவலிவரின் வலிமெலிமிகலுமாம். | | | (இ-ள்.) முன்சொன்ன விதியிற் சில விகற்பமாமாறுணர்த்துதும், தேனெனுமொழி எவ்வகை மெய்வரினும் இயல்பாதலு மெல்லினம்வரின் னகரங்கெடுதலும் வல்லினம்வரின் னகரங்கெட்டு வல்லெழுத்து மெல்லெழுத்து மிகுதலுமாகும் வேற்றுமையிடத்தும் அவ்வழியிடத்து மென்ப. (உ-ம்.) |
|
|