சீரியற்சீர்வரு முதலீரிருசீர், கடையே யிடைநிரை வெண்சீராய் வெண்டளை காத்தடிநான், குடையே கடையாய்க் கடைமோனை நான்கடி யோரெதுகை, நடையே கலித்துறை யாமெனக் கற்றோர் நவின்றனரே." என்ப தாகையின் முதனாற்சீர் தேமா புளிமா கருவிளங் கூவிளமென நாலியற்சீராகவு மொரோ விடத்துத் தேமாங்காய் புளிமாங்காயென விடைநே ரிருவெண் சீராகவும் வருமேயல்லன, கருவிளங்காய் கூவிளங்கா யென விடைநிரையிரு வெண்சீர் கலித்துறைக் கைந்தாஞ் சீராக வருவது முறையா மன்றியே முதனாற் சீராகவரா வெனக் கொள்க. எ-று. (23) | ................... | வஞ்சித்துறை யிலக்கணம் வருமாறு:- | Vanjitturei. | 242. | வஞ்சித் துறைகுற ளடிநான் கொத்ததே. | | (இ-ள்.) வஞ்சித்துறை யாமாறுணர்த்துதும். குறளடி நான்கு மொத் துவருவன வஞ்சித்துறை யெனப்படும். - "குறளடி நான்காய் கூடி யொத்த, முறையான் வருவன வஞ்சித் துறையே." என்பதியாப்பருங்கலம். இவையும் விருத்த மெனப்படும். (வ-று.) - திருக்காவலூர்க் கலம்பகம் - "வண்டிமிரும் வாய்மலர்க்காக், கண்டிமிருங் காவலூர், பண்டினிதாள் பாவைப்பணிந், தண்டினரே யண்டாரோ." எ-ம். "பேரறி வன்னான், சார விருந்த, வூரினு மில்லென், றார விகழ்ந்தே." எ-ம். வரும். எ-று. (24) | ...................... | தாழிசை யிலக்கணம் வருமாறு:- | Tarisei. | 243. | குறட்டா ழிசையொலி குன்றுங் குறளு மந்தடி குறைநவுஞ் செந்துறைச் சிதைவுமாம் வெண்டா ழிசையெனில் வெண்சிந் தியல்போ லண்டாப் பிறதளை யணைந்து வருமே. | | (இ-ள்.) நிறுத்த முறையானே குறட்டாழிசையும் வெண்டாழிசையு மாமாறுணர்த்துதும். குறள் வெண்பா வினமாய் வருந் தாழிசைக் குறட் டாழிசை, எ-ம். தாழிசைக்குறள், எ-ம். வழங்கும். இவையே கடைகுறை குறட்டாழிசை, எ-ம். செந்துறை சிதைவுத் தாழிசைக்குறள், எ-ம். குறட்டாழிசை எ-ம். மூவகைப்படு மெனக்கொள்க. - "அந்தடி குறைநவுஞ் செந்துறைச் சிதைவுஞ், சந்தழி குறளுந் தாழிசைக் குறளே." என்பதி யாப்பருங்கலம். ஆகையிலிவற்றுட் சீரளவின்றிப் பலசீரான்வரு மீரடி பெற் றீற்றடியே யளவுகுறைந்து வருவன கடைகுறை குறட்டாழிசை யெனப்படும். (வ-று.) "தூற்றுவாய் மதுமலர்காச் சூழ்ந்த காவலூர் நாயகி, யேற்றுவார் வினையாற்றி யிவனாள வெய்தினாளே." என முதலடியைஞ் சீரானு மீற்றடி |
|
|