மெலியகவன் மயங்கிசை வண்ணம், இடையகவன் மயங்கிசை வண்ணம், 5; குறிலொழுகன் மயங்கிசை வண்ணம், நெடிலொழுகன் மயங்கிசை வண்ணம், வலியொழுகன் மயங்கிசை வண்ணம், மெலியொழுகன் மயங்கிசை வண்ணம், இடையொழுகன் மயங்கிசை வண்ணம், 5; குறில் வல்லிசை மயங்கிசை வண்ணம், நெடில் வல்லிசை மயங்கிசை வண்ணம், வலி வல்லிசை மயங்கிசை வண்ணம், மெலி வல்லிசை மயங்கிசை வண்ணம், இடைவல்லிசை மயங்கிசை வண்ணம், 5; குறின் மெல்லிசை மயங்கிசை வண்ணம், நெடின் மெல்லிசை மயங்கிசை வண்ணம், வலி மெல்லிசை மயங்கிசை வண்ணம், மெலி மெல்லிசை மயங்கிசை வண்ணம், இடை மெல்லிசை மயங்கிசை வண்ணம், 5; ஆக 20. ஆக வண்ண நூறும் வந்தவாறு காண்க. வண்ண மெனத் தொகையா னொன்றும் வகையா னைந்தும் விரியானூறு மெனப் பிரித்துச் சொன்னார் கையனார் முதலாகிய வொருசா ராசிரியர். - தொல்காப்பியம். - "வண்ணந் தானே நாலைந் தென்ப. - அவற்றுள் பாஅவண்ணஞ் சொற்சீர்த்தாகி நூற்பாப் பயிலும். - தாஅவண்ண மிடையிட்டு வந்த வெதுகை யாகும். - வல்லிசை வண்ணம் வல்லெழுத்துப் பயிலும். - மெல்லிசைவண்ண மெல்லெழுத்து மிகுமே. - இயைபு வண்ண மிடை யெழுத்து மிகுமே. - அளபெடை வண்ண மளபெடைபயிலும். - நெடுஞ்சீர் வண்ண நெட்டெழுத்துப் பயிலும். - குறுஞ்சீர் வண்ணங் குற்றெழுத்துப் பயிலும். - சித்திரவண்ண நெடியவுங் குறியவு நேர்ந்துவருமே. - நலிபு வண்ண மாய்தம் பயிலும். - அகப்பாட்டு வண்ண முடியாத் தன்மையின் முடித்ததன் மேற்றே. - புறப்பாட்டு வண்ண முடிந்தது போன்று முடியா தாகும். - ஒழுகு வண்ண மோசையி னொழுகும். - ஒரூஉவண்ண மொரீஇத் தொடுக்கும். - எண்ணு வண்ண மெண்ணுப் பயிலும். அகைப்பு வண்ண மறுத்தறுத் தொழுகும். - தூங்கல் வண்ணம் வஞ்சி பயிலும். - ஏந்தல் வண்ணஞ் சொல்லிய சொல்லிற் சொல்லியது சிறக்கும். - உருட்டுவண்ண மராகந் தொடுக்கும். - முடுகுவண்ண மடியிறந்தோடி யதனோரற்றே. - வண்ணந் தாமே யிவையென மொழிப." இவைமேற்கோள். எ-று. (32) | இரண்டாமோத்துச் செய்யுளியள். - முற்றிற்று. | ......................... | மூன்றாமோத்துச் செய்யுண்மரபியல் Chapter III. - Miscellaneous Verses. | 251. | செய்யு டெரிவுற முத்தகங் குளகந் தொகைதொடர் நிலையெனத் தொகுதி நான்வற்றுண் முத்தகந் தனித்தாய் முடியுஞ் செய்யுளே. | |
|
|