(இ-ள்.) மேல்விரித் துரைத்த பாவும் பாவினமுந் தனித்து நின்றுந் தொடுத்துநின்றுந் தன்பொருண் முடியவருவன செய்யுளெனப்படும். இவற்றின்வகையு மிவற்றிற்கியலுந் தன்மையு மீண்டு விளங்குவ தாகையி லிவ்வோத்துச் செய்யுண் மரபெனும் பெயர்த்து. இதனைப் பாட்டிய லென்மரு முளரெனக் கொள்க. ஆகையின் முத்தகமென்றுங் குளகமெ ன்றுந் தொகைநிலையென்றுந் தொடர்நிலையென்றுஞ் செய்யுளெல்லா நால்வகைப்படுமென்றுணர்க. இவற்றுண் முத்தகச்செய்யு ளென்பது தனியே நின்றொரு பொருளைப் பயின்று முடியும். (வ-று.) வெண்பா. - "மூவா முதலா மூவாளோர் முதலோனைத், தாவாதோர் மூவுலகுந் தாழ்ந்தேற்றத் - தூவாத, பாவடியைப் பாடிப் பரகதி நாஞ்சேரச், சேவடியைச் சேர்ந்துந் தொழுது." எ-ம். - "ஞானமே நல்லமைச்சாய் நாற்கரண நாற்ப டையாய்த், தானம் விருதாய்த் தவமரணாய்ப் - பானணியாய்க், காவலூர்த் தாய்க்கண் ணருட்குடைக்கீழ்க் கன்னிமையே, யாவலூர்ந் தாளு மரசு" எ-ம். பிறவுமன்ன. - தண்டியலங்காரம். - "செய்யுளென்பவை தெரிவுற விரிப்பின், முத்தகங் குளகந் தொகைதொடர் நிலையென, வெத்திறத் தனவு மீரிரண் டாகும். அவற்றுண், முத்தகச் செய்யுட் டனிநின்று முடியும்." இவை மேற்கோள். எ-று. (1) | 252. | குளக மொருவினை கொளும்பல பாட்டே. | | (இ-ள்.) குளக மாமாறுணர்த்துதும். ஒவ்வொருபாட்டுத் தன்வினைக் கொள்ளாமற் பலவேகூடி யொருவினை கொண்டு முடிவன குளகச்செய்யு ளெனப்படும். (வ-று.) "கோதொழி மெய்ம்மறைக் குன்றுங் கூவெலாந், தீதொழித் தீர்த்தநன் னதியுஞ் சேர்பொதுப், பாதொழி நாடெனப் பவன மூன்றுமுன், வாதொழி திருவில் வாழ் வார்சொல் பாழியும் - ஆக்கமே பிணையிலீ ரறத்தின் மாலையு, மூக்கமே புரவியு முலக தீர்ததடு, நோக்கமே வேழமு நொடிப்பின் யாவையுந், தாக்கமே லதிர்முகின் முரசின் றன்மையும். - மீயரிதுதித்தமீன் விரிபதாகையு, நோயரிநீதியி னுனித்தகோன்மையுங், காயரிதினைந்தபூங் காவிற்காவலூர்த், தாயரி தீன்றகோன் றசாங்க மென்பவே." என விம்மூன்று மொருவினைகொண்டு முடிந்தமையாற் குளகச் செய்யுளெனப்படும். பிறவுமன்ன. - தண்டியலங்காரம். - "குளகம் பலபாட் டொருவினை கொள்ளும்." இது மேற்கோள். எ-று. (2) | 253. | தொகைநிலைச் செய்யு டோன்றக் கூறி னொருவ னுரைத்தவும் பல்லோர் பகர்ந்தவும் பொருளிடங் காலந் தொழிலென நான்கினும் பாட்டினு மளவினும் கூட்டிய தாகும். | | (இ-ள்.) தொகைநிலைச் செய்யு ளாமாறுணர்த்துதும். சூத்திரத்திற்காட்டிய பலவகைத் தொகைப்பாட்டிணைந்து வருவன தொகைநிலைச்செய்யுளெனப்படும். |
|
|