271. | வரலாற்று வஞ்சியாம் வல்லறமுத னான்கும் வருமா றுரைத்து வஞ்சி பாடலே. | |
(இ-ள்.) வரலாற்றுவஞ்சி யாமாறுணத்துதும். அறம் பொருளின்பம் வீடென நான்கு மாமாறுணர்த்தி வஞ்சிப் பாவான் முடிந்த செய்யுளே வரலாற்று வஞ்சி யெனப் படும். எ-று. (21) |
272. | நான்மணி மாலையே நாற்பதந் தாதியாய்த் தான்மணிக் கொத்தன தந்தன்மன விருத்தமே. | |
(இ-ள்.) நான்மணிமாலை யாமாறுணர்த்துதும். கழிநெடிலடியால் வரு மாசிரிய விருத்த மந்தாதியா யொரு நாற்பது மாகத் தொடுத்த செய்யுளே நான்மணிமாலை யெனப்படும். மனவிருத்த மெனினு மாசிரிய விருத்த மெனினு மொக்கும். எ-று. (22) |
273. | விருத்த விலக்கணம் விளம்புங் காலைக் குடையூர் நாடுகோல் பரிகரி வில்வடி வாள்வே லொன்பான் வகுப்புமன விருத்த மீரைந் தவ்வவற் றியற்பெயர் கொள்ளுமே. | |
(இ-ள்.) விருத்த விலக்கண மாமாறுணர்த்துதும். பாட்டுடைத் தலை மகனுடைய குடையு - மூரு - நாடுஞ் - செங்கோலுங் - குதிரையும் - யானையும் - வில்லும் - வாளும் - வேலு - மென்றிவ் வொன்ப துறுப்பும் விளங்கித் தோன்றப் புகழ்ந் தொவ்வொரு வகுப்பிற்குப் பத்தாசிரிய விருத்த மாகப் பாடவே விருத்த விலக்கண மெனும் பெயர்மெற் றொவ்வொரு வகுப்புத் தத்த முறுப்பியற் பெயரைக் கொண்டு வழங்கும். அங்ஙனங் குடைவிருத்த மூர்விருத்த நாட்டு விருத்தம். பிறவுமன்ன. எ-று.(23) |
274. | இருபா விருபதா மிணைந்த நாலைந்தாய் வெள்ளை யகவல் விரவிப் பாடலே. | |
(இ-ள்.) அட்டமங்கல நவமணிமாலை யாமாறுணர்த்துதும். பாட்டு டைத் தலைவனைக்கவி கவிதோறுந் தெய்வங் காப்பவென் றாசிரிய விருத்த மெட்டாக முடிவ தட்ட மங்கல மெனவு மொன்பதாக முடிவது நவமணி மாலை யெனவும் வழங்கும். எ-று. (24) |
275. | பலசந்த மாலை பப்பத் தொருசந்தஞ் சிலவந் தாதியாய்ச் செப்புமன விருத்தமே. | |
(இ-ள்.) பலசந்தமாலை யாமாறுணர்த்துதும். அந்தாதியாக நூறாசிரிய விருத்தம் பாடி பப்பத்தொவ்வொரு சந்தமாகத் தொடுத்த செய்யுளே பல சந்தமாலை யெனப்படும். எ-று. (25) |