281. | மும்மணிக் கோவையே முப்பதந் தாதியா யகவல் வெள்ளை கலித்துறை முறைவரு மும்மணி மாலையா முறைமாறி வெள்ளை கலித்துறை யகவல் கதிபெறுஞ் செய்யுளே. | |
(இ-ள்.) மும்மணிக்கோவையு மும்மணிமாலையுமாறுணர்த்துதும். அந்தாதி யாகவு முப்பது பாட்டாகவு மகவல் - வெண்பா - கலித்துறை யென விம்மூன்று மிம்முறையானே தொடுத்து வருவது மும்மணிக் கோவை யெனப்படும். அங்ஙன மம்மூவகைப் பாட் டொழுங்குமாறி வெண்பா - கலித்துறை - அகவலாக - தொடுத்து வருவது மும்மணிமாலையெனப்படும். எ-று. (31) |
282. | இணைமணி மாலை யிணைவெண்பாக் கலித்துறை யகவன் மனவிருத்தந் தொடர்நூ றியம்பலே யலங்கார பஞ்சக மந்நால் வகைப்பாக் கலந்தவ் வைந்தாய்க் கதிபெறப் பாடலே. | |
(இ-ள்.) இணைமணிமாலையு மலங்காரபஞ்சகமு மாமாறுணர்த்துதும். வெண்பா - கலித்துறை - ஆசிரியப்பா - ஆசிரியவிருத்தமென - இந்நான்குங்கலந்து நூறாக வருவ திணைமணிமாலை யெனவு மந்நால்வகையும் வகைக்கோரைந்து பாட்டாக வருவ தலங்கார பஞ்சக மெனவும் வழங்கும். எ-று. (32) |
283. | பாப்பொரு ளளவாதி பலபெய ருளபிற. | |
(இ-ள்.) செய்யுட்குப் பொதுவிதி யுணர்த்துதும். மேற்கூறியவற்றை யன்றிப் பாவானும் பொருளானு மளவானு முதலிய காரணங்களானும் வேறுபடப் பெயர்பெறுவனவுள வெனக்கொள்க. அங்ஙன மாசிரியமாலை, வெண்பாமாலை, முதலிய பலவும் பாவாற் பெயரைப் பெற்றன. தாராகிய கொடிப் படையைப் பாடலிற் றார்மாலையுங் கார்முதலாறு பருவங்களைப் பாடலிற் பருவமாலையு மினியவு மின்னாவும் பாடலி லிருமொழிமாலையு முதலிய பலவும் பொருளாற் பெயரைப் பெற்றன. நயனப்பத்தும், பயோதரப்பத்து, மினியநாற்பது மின்னாநாற்பது முதலிய பலவும் பொருளானு மளவானும் பெயரைப் பெற்றன. சூத்திரத்துட் பிறவென்ற மிகையான் மற்றைப் பிரபந்தங்கள் வருமாறு. |
ஐந்திணைச் செய்யுள்:- புணர்தன் முதலிய வைந்துரிப் பொருளும் விளங்கக் குறிஞ்சி முதலிய வைந்திணையினையுங் கூறுவது. |
வருக்கக் கோவை:- அகர முதலாகிய வெழுத்துவருக்க மொழிக்கு முதலா மெழுத்து முறையே காரிகைத் துறைப் பாட்டாகப் பாடுவது. |
அநுராக மாலை:- தலைவன் கனவின்க ணொருத்தியைக் கண்டு கேட்டுண் டுயிர்த் தினிமையுறப் புணர்ந்ததைத் தன்னுயிர்ப் பாங்கற் குரைத்ததா கநேரிசைக் கலிவெண்பாவாற் கூறுவது. |