வந்த வாறு காண்க. - பாட்டியல். - "குறிலைந்துந் தன்னெடில்கொண் டி உ ஐ ஒள சேர்த், தறிபால னாதியா வைந்து மிறைவன்பேர், முன்னெழுத்துப் பாலனில் வைத்தெண்ணி மூப்பே மரண, மென்னுமிவை தீதென்றே யெண்." இது மேற்கோள். எ-று. (38) | 289. | பாலெனக், குறிலா ணெடில்பெண் மற்றுயி ராணுயிர் மெய்பெண் ணென்மரு முளரே யவைதம் பாவியல் கெடினுமா மற்றவை யலியே. | | (இ-ள்.) பாற்பொருத்த மாமாறுணர்த்துதும். குற்றெழுத் தெல்லா மாண்பாலெனவு நெட்டெழுத்தெல்லாம் பெண்பாலெனவுங் கொள்க. அன்றியு முயிரெலா மாண்பாலெனவு முயிர்மெய்யெல்லாம் பெண்பாலெனவுங் கொள்வார் பிங்கலந்தை முதலிய நூலார். அவற்றுண் மாந்தரைப்புகழ வாண்பாலெழுத்து மாதரைப்புகழப் பெண்பாலெழுத்து முதற்கண்வரிற் பாலொன்றிச் சிறப்பாமாயினு மவையே மயங்கிவரினு மிழுக்கா. ஒற்றெழுத்து மாய்தமு முதற்கண்வாரா. அவை யலியெனப்படும். - பாட்டியல். - "எண்ணுங் குறிலா ணியைந்த நெடிலெல்லாம், பெண்ணாகு மொற்றாய்தம் பேடாகும் - பெண்ணினோ, டாண்புணர்ச்சிக் கவ்வ வெழுத்தே மயங்கினுமா, மாண்பில் பேடென்றார் மதித்து." இது மேற்கோள் எ-று. (39) | 290. | உணவெண், அ இ உ எ க ச த ந ப ம வ வென் றமுதெழுத் தாகி யாதிச் சீர்க்குந் தசாங்கத் தயற்குந் தகுவன வென்ப யா யோ ரா ரோ லா லோ வவற்றொற்று மளபெடை மக்குற ளாய்தநஞ் செழுத்தே. | | (இ-ள்.) உணவுப் பொருத்த மாமாறுணர்த்துதும். கூறிய நாலுயிரு மேழொற்றும் அமுதெழுத் தெனப்படும். இவை முதற்சீர்க்கு மலைமுதன் மேற்காட்டிய தசாங்கத்தினயற்குமாகும். அன்றியும், யா, யோ, ரா, ரோ, லா, லோ, ய, ர, ல, என்னு மூவொற் றெழுத்து மிரண்டளபெடையு மகரக் குறுக்கமு மாய்தமு மெனவிவை நஞ்செழுத் தாகி முதற்சீர்க் கண்ணுந் தசாங்கத்தி னயற்கு மாகா வென்மனார் புலவர். - பாட்டியல். - "மதித்த க ச த ந ப மவ்வொடு வவ்வு, முதித்தமைந்த நாற்குற் றுயிருந் - துதித் தமுதென், றாதி மொழிக்குந் தசாங்கத் தயலுக்குந், தீதிலவே யென்றார் தெரிந்து." இது மேற்கோள். எ-று. (40) | 291. | வருணப் பொருத்தமே வருமுயி ரடங்கலும் கம்முத லாறுங் கைசிகர்க் காகுந் | |
|
|