(இ-ள்.) கதிப்பொருத்த மாமாறுணர்த்துதும். அ, இ, உ, எ, க, ச, ட, த, ப, என வொன்பதெழுத்துந் தேவர்கதி யெனவும்; ஆ, ஈ, ஊ, ஏ, ங, ஞ, ண, ந, ம, என வொன்பது மக்கட்கதியெனவும்; ஒ, ஓ, ய, ர, ல, ழ, ற, என வேழும் விலங்கின் கதியெனவும், ஐ, ஒள, வ, ள, ன, என வையந்து நரகர்கதி யெனவும் வழங்கும். இவற்றுட் டேவர்கதியு மக்கட் கதியு நல்லன வெனவு மற்ற விருகதி தீயன வெனவுங் கொள்க. - வெண்பா. பாட்டியல். - "வேண்டுங் குறில்வன்மை யீறொழித்தால் விண்ணோர்க்கா, மாண்டுநெடின் முதனான் கந்தமொழித் - தீண்டிய, மென்மையா மக்கட் கிவையிரண்டு மெய்க்கதிக்கு, நன்மையா முன்மொழிக்கு நாட்டு. - நாட்டிய ஒ ஓ ய ர ல ள நல்வன்மைக், கீட்டிய வந்தமிவை விலங்காங் - காட்டா, தொழித்த நரகர்க் கென்றோதி னாரின்ன, வெழுத்தாகா வாதி யிடத்து." இவை மேற்கோள். எ-று. (43) | 294. | கணமியல் பொருத்தமே கணமெனுஞ் சீரினுண் முன்ன ரிந்திரன் முன்னிரை நிலனே நிரைநேர் நேர்மதி நேர்நிரை நிரைநீ ரிந்நாற் கணநன் றாமிவை முதற்சீர்க்கே யிருவிளங் காய்முறை யந்தரஞ் சூரிய னிருமாங் கனிமுறை வாயு தீயிவை வருமுதற் சீர்க்கு வழுக்கண மென்ப. | | (இ-ள்.) கணப்பொருத்த மாமாறுணர்த்துதும். வடமொழியாற் கண மெனினந் தென்மொழியாற் சீரெனினுமொக்கும். இவற்றுண் முதற்கண் வருஞ்சீர் தேமாங்காயாயி னிந்திரகணமெனவும், கருவிளங் கனியாயி னிலக்கணமெனவும், புளிமாங்காயாயின் சந்திரகணமெனவும், கூவிளங்க னியாயி னீர்க்கணமெனவும் வழங்கும். இந்நாற்கணமு நல்லனவென்ப. அன்றியு முதற்கண்வருஞ்சீர் கருவிளங்காயாயி னந்தரகணமெனவுங், கூவிளங்காயாயிற் சூரியகணமெனவுந், தேமாங்கனியாயின் வாயுகணமெனவும், புளிமாங்கனியாயின் றீக்கணமெனவும் வழங்கும். இவை முதற்சீராகவ ரின்றீதென்பந், என்னை. "அந்தர கணமே வாழ்நாட் குன்றும். - சூரியகணமே வீரிய மகற்றும். - வாயுகணமே செல்வ மழிக்கும். - தீயின் கணமே நோயை விளைக்கு மென்மனார் சிலரே." ஆயினு மிவற்றை யிருள்வழி மதமென விதித்தார் வேதவழித் தெளிந்தா ரெனக் கண்டுணர்க. அன்றியு மிலக்க ணமுறையே வடமொழி நூலில் வழங்கு நடையாமொழியத் தென்மொழி நூலார் முதற்சீரா வியற்சீர்மிகவே வழங்குவா ரெனவுங் கொள்க. விருத் தப்பாட்டியல். - "துறக்க மதிவான் பரிதி காய்ச்சீர் முன்னுஞ்சூழ் காற்றுத்தீ நிலநீர் கனிச்சீர் பின்னு, நிறுத்துகண மிவையுமா மகவற் சீரி னேரிறும் வெள்ளைச் சீர்நிரை வஞ்சிச்சீர், சிறப்புடை யவ்விரண்டுமாங் கணப் |
|
|