(இ-ள்.) கலிக்கியல் புணர்த்துதும். வணிகர்சாதியு மருதநிலமும் பொன்னினிறமு மனுடங் கேட்டை மூலம் பூராட முத்திராடந் திருவோண மென வறுநாளு மிதுனந் துலாங் கும்ப மென மூன்றிராசியும் புதன் சனி யென விருகிரகமுங் கலிப்பாவிற் கியல்பெனக் கொள்க. எ-று. (47) |
298. | வஞ்சிக் கீறதியல் வருண நெய்த லஞ்சன மவிட்ட மாதி யேழும் விடைபெண் கலைபுகர் விடதர மியலுமே. | |
(இ-ள்.) வஞ்சிக்கியல்பினை யுணர்த்துதும். சூத்திரர்சாதியு நெய்தநிலமுங் கரியநிறமு மவிட்டஞ் சதையம் பூரட்டாதி யுத்திரட்டாதி யிரேவதி யசுவதி பரணியெனவேழுநாளு மிடபங் கன்னி மகரமென மூன்றிராசியுஞ் சுக்கிரன் பாம்பென விருகிரகமும் வஞ்சிக் கியல்பெனக் கொள்க. ஆகையின் முதற்பாநான்கிற்கு மிலக்கணமாறும் வந்தவாறு காண்க. எ-று. (48) |
299. | ஆசு மதுரஞ் சித்திர வித்தார மேசில் கவிநான் கிவையென் பவற்று ளெடுத்த பொருளிற் றொடுத்த வின்பத்தி லடுத்த பொழுதிற் பாடுவ தாசே யுடைப்பொருட் பொலிவு முரிச்சொற் செல்வமுந் தொடைப்பொலி விகற்பமுந் தொடரணிச் சிறப்பு மிசைபெற வோசையு மியலப் பாடி வசையில் வருங்கவி மதுர மாமே கோமூத் திரிமுதற் கூறிய மிறைகவி சித்திர மென்பர் சிறுபான்மை யவையெனப் பத்திர முதனுண் பத்தியிற் பாடிச் சித்திரம் போல்வன சித்திரக் கவியே தொடர்நிலை தொகைநிலை தொடுத்த பல்பாவுந் தொடைபல வாகத் தொடுத்த வொருபாவும் வித்தாரக் கவியென விளம்பினர் புலவர். | |
(இ-ள்.) நாற்கவி யியல்பினை யுணர்த்துதும். எவ்வகைச் செய்யுளைப் பாடினும் பாடியதிறத்தால் வேறுபடாமன் மற்றொருநால்வகைக் கவிவ குத்தார்புலவர். அவையே ஆசு-மதுரஞ்-சித்திர-வித்தார-மென நாற்கவியா மன்றியே யவற்றைப் பாடுவார்க்கும் பெயர் செல்லுமென் றுணர்க. அங்ஙனம் ஆசுகவியைப்பாடும் புலவனு மாசுகவி யெனப்படுவன். பிறருமன்ன. ஆகையி லவற்றுட்பொருளு மடியும் பாவு மணியு முதலியவற்றை மற்றொருவன் குறித்துப் பாடுக வென்ற வுடனே பாடுவ தாசெனப்படும். அன்றியும் பொருட்பொலிவாதி சூத்திரத்துட் கூறிய விலக்கண முறையாற்றொடுத் |