(இ-ள்.) ய ர ழ என்னு மூன்றொன்றையும் ஈற்றிலேயுடைய நிலைமொழி முன்னே க ச த ப வருமொழிமுதல்வந்து புணர்ந்தால் அல்வழியில் மிகாமல் இயல்பாம். (உ-ம்.) நாய்சிறிது, தேர்சிறிது, வீழ்சிறிது, எ-ம். வரும். அன்றியும், நிலைமொழிப்பதம் தொகைப்பட்டு அடைமொழியாகநின்றால் வருமொழிப்பத முதலில்வல்லினமிகும். (உ-ம்.) பொய் + செல்வம் = பொய்ச்செல்வம், கார் + பருவம் = கார்ப்பருவம், பாழ் + கொல்லை = பாழ்க்கொல்லை, எ-ம். வரும். இவைமூன்றும்பண்புத்தொகை. அன்றியும்,அம்மூன்றொற்றையும் ஈற்றிலேயுடையநிலைமொழிப்பதங்கண்முன் வேற்றுமையில் வல்லினமு தன்மொழிவந்து புணர்ந்தால் வல்லினமிகுதலு மெல்லினமுறழ்தலுமாகும். (உ-ம்.) வேய் + குறை = வேய்க்குறை, வேர் + குறை = வேர்க்குறை, வீழ் + குறை = வீழ்க்குறை, எ-ம். வேய் + குறை = வேய்ங்குறை, வேர் + குறை = வேர்ங்குறை, வீழ் + குறை = வீழ்ங்குறை, எ-ம். வேற்றுமைவழிக்கண் வல்லின மிக்கலு மெல்லின முறழ்தலுமாயினவாறு காண்க, எ-று. (10) | 31. | சிலபலதம்மொடு சேர்புளியியல்பு முதன்மெய்க்கடைமெய் மிகலுமீறுபோய் லறவ்வாதலும் லாவாதலுமாம் பிறவரினகர நிற்றலுங் கெடலுமாம். | | | (இ-ள்.) சிலபலவென்னும் இவ்விருசொல்லும் இரட்டித்து வருங்கால் இயல்பாய் நிற்கவு முதலொற்றாயினுங் கடையொற்றாயினு மிக்கு வரவும், அகரங்கெட்டு லகரம் றகரமாகவும் பெறும். (உ-ம்.) பலபல, சிலசில, என இயல்பாயின. பலப்பல, சிலச்சில என ஒற்றுமிக்கன. பற்பல, சிற்சில, என அகரங்கெட்டு லகரம் றகரமாயின. பல்லபல, சில்லசில, என லகரமிக்கன. ஒரோவிடத்து ல லாவாகத்திரியும். (உ-ம்.) பலாம், சிலாம். எ-ம். அன்றியும், பிறமொழிபுணருங்கால் அகரம் நிற்கவு நீங்கவுமாம். (உ-ம்.) பல்கலை, என அகரநீங்கிற்று. பற்கலை, என அகரநீங்கி லகரம் றகரமாயிற்று. பலநாள், என அகரநின்றது. பன்னாள், என அகரங்கெட்டு லகரம் னகரமாயிற்று. பல்மணி, பன்மணி; பலவணி, பல்லணி; பலவாயம், பல்லாயம்; பலவளை, பல்வளை; பல்ஞானம், பன்ஞானம். எ-ம். வரும். ஆயினுந் தகரம்வரின் இயல்பாகவும், அகரம்போய் இருபத்தாறாஞ் சூத்திரத்தின்படி தனி றவ்வெய்தி ஆய்தம்வரவுமாகும். (உ-ம்.) பல் + தொடை = பஃறொடை, பல் + தாழிசை = பஃறாழிசை, எ-ம். பிறவுமன்ன. பல்பல, சில்சில, எ-ம். வரும். எ-று. (11) | 32. | ஆமாவல்வழி ஆவீறுமுற்று மியாவிவைமுன்வலி மிகாதியல்பாகும். | | | (இ-ள்.) அல்வழிவந்த ஆமாவென்ற இருபெயரும் மியாவென்ற அசைச்சொல்லும் ஆவீற்ற வெதிர்மறை முற்றுவினையும் எனவிவை வல்லினத்தோடு |
|
|