மொருக்குடன் வைத்த வுதாரண நோக்கி, விரித்து நிறைத்து மிறைக்கவி பாட்டுந், தெரிந்து பாடுவோன் சித்திரக் கவியே. - மும்மணிக் கோவையும் பன்மணி மாலையு, மறமுங் கலிவெண் பாவு மடலூ ருதலுங், கிரீடையுங் கூத்தும் பாசாண்டத் துறை யும், வகுத்த வகுப்பும் விருத்தக் கவியும், விரித்துப் பாடுவோன் வித்தாரக் கவியே." எ-று. (49) |
300. | ஈரசை யைஞ்சீ ரெழுதளை யையடி யாறே ழொருதொடை யைம்பா மூவினஞ் செய்யு ணான்குஞ் செய்யுள் விகற்பமு மையிரு பொருத்தமு மாக மெய்யுரை யாப்பை விளக்கிய தொகையே. | |
(இ-ள்.) ஆதியி னிறுத்த முறையானே யாப்பதிகாரத்துள் விளக்கிய பொருளெலா மொன்று படுத்திய தொகைச் சூத்திரம் வந்த வாறு காண்க. எ-று. (50) |
மூன்றாமோத்துச் செய்யுண்மரபியல். - முற்றிற்று. |
........................... |
அதிகார மொன்றிற்கு, ஓத்து மூன்றிற்கு, ஆக சூத்திரம். 100. மேற்கோள். சூ. 164. ஆக சூ. 264. |
அதிகார நான்கிற்கு மேற்கோளோடு கூடிய ஆக சூ. 703. |
....................... |
நான்காவது:-யாப்பதிகாரம்.-முற்றிற்று. |