(இ-ள்.) நிறுத்த முறையானே மறிநிலையணி யாமாறுணர்த்துதும். பொருட்பெயர்மாறி யொன்றன்பெயர் பிறிதொன்றற்குரைப்பது மறிநிலை யெனப்படும். இவற்று ளொன்றன்குண மற்றொன்றற்குரைப்பது பண்பு மறிநிலை, எ-ம். சினைப்பெயர் முதற்கும், முதற்பெயர் சினைக்குஞ் செல்ல வுரைப்பது முதன்மறிநிலை, எ-ம். இவ்வாறே காரணமுங் காரியமுந் தம் முண்மாறவுரைப்பது காரணமறிநிலை, எ-ம். சொல்வேறுணர்ந்த குறிப்பு வேறாகத் தோன்றவுரைப்பது குறிப்புமறிநிலை, எ-ம். உலகினொழுக்க மாற வுரைப்ப தொழுக்கமறிநிலை, எ-ம். வழங்கும். (வ-று.) சினத்திற்காய்ந்தான் - உளத்தில்வெந்தான் - முல்லைநகைப்பன் - குவளைவிழிப்பன - அள்ளருடுஞ்சு மார்பன் - நள்ளிருடுஞ்சுங்கூந்தல் - `நெட்டொளி வேங்கையா னிசிப்பட நீத்தீங்குயிராக், கட்டொளியைக் காட்டுங் கதிர்வேந்தன்.ழு - என்பனவற்று ளொன்றன்குணம் பிறிதொன்றற் குரைப்பது குணவழுவென்று தோன்றினு மவையே சிறந்தவுவமையாற் பிறிதிற்பொருந்தப் புனைந்துரைத்தமையாற் பண்புமறி நிலையலங்கார மாயிற்றெனக் கொள்க. இதனைச் சாமாதி யென்மரு முளரென்றுணர்க. அன்றியும், பூநிழற்சோலை - யென மரமாகிய முதற் பொருள் செய்நிழல் மலராகிய சினைப் பொருண்மேலுரைப் பவும், நறும்பொழி - லென மலராகிய சினைப்பொருளால் வரும்வாசனை பொழிலாகிய முதற் பொருண்மே லுரைப்பவும், முதலுஞ் சினையுமாறி முதன்மன்றிநிலை யலங்காரமாயின. அன்றியும், "ஏரினு நன்றா மெருவிடுதல் கட்ட பின், னீரினு நன்றதன் காப்பு." என உழுந்தொழிலைக் காட்ட வதற்குக் காரணமாகிய வேரினையுரைப்பவும், `ஒளியெழுந் தொரெழீஇ யுலகம்வாழ்ந்ததே.ழு - என வொளியாகிய காரியத்தால் ஞாயிறென்னுங் காரணத்தைக்காட்டியுரைப்பவும், |