இருவகைக்காரணமறிநிலை யலங்காரமாயின. அன்றியு மாறுமாத - மென்பதற்காறுதிங்களெனவும், ஆறுவருடமாயிற் - றென்பதற் கறுபயிராயிற் - றெனவும், இரவடுத்துறங்கால் வந்தானென்பதற்கு - "கஞ்சமே சினந்தெனக் கமழ்கத வடைப்பவும், பஞ்சிறைக் கிளியொடு பறவையார்த் தொடுங்கவும், பிரிநிலைக் கண்டுணர் பெற்றம்வந் தேங்கவும், விரிநிலைத் தோளினான் விரும்பி யெய்தினான்." என்பன விவற்றுட் சொல் வேறாகிக் குறித்தபொருள் வேறாகையிற் குறிப்புமறிநிலை யலங்காரமாயின. அன்றியும். - "வண்டிசைக்குங் கூந்தன் மதர்விழிகள் சென்றுலவ, வெண்டிசைக்கும் போதா திடம்.' எ-ம். "கெழுஞ்சுனை வரம்பில் வைகிக் கிளைத்தநோ யழன்ற நெஞ்சா, னழுஞ்சுனைப் பெருகுங் கண்ணீ ரகல்கடல் வெள்ள மாற்றா." எ-ம். "சேட்டிளம் பரிதிமார்பன்." எ-ம். 'முகிற்கை அயிற்கண் வரைத்தோள்.' எ-ம். பலவுமுலகி லொழுகுந்தன்மையைக் கடந்த வாயினுஞ் சிறந்தபுகழ்வழியாகப் புனைந்துரைத்தமையா லொழுக்கமலை வாகாம லொழுக்க மறிநிலை யலங்காரமாயின. இவற்றுட் பலவை பொருளைப்பற்றிவரினு மொருசொல்லெல்லையின் முகியுமென்றமையாற் சொல்லணியாக வைக்கப்பட்டன. எ-று. (1) | 305. | பொருள்கோளு மறிநிலை போல்வன வாமவை யாற்றுநீர் மொழிமாற்று நிரனிறை விற்பூண் டாப்பிசை யளைமறி பாப்புக் கொண்டுகூட் டடிமறி மாற்றென வாகுமெட் டென்ப. | | (இ-ள்.) முன்னோர்வகுத்த வெண்பொருள்கோளு மறிநிலையணி யென வழங்கும். அவையே யாற்று நீர்ப் பொருள்கோளும் - மொழிமாற்றுப் பொருள்கோளும் - நிரனிறைப் பொருள்கோளும் - பூட்டுவிற் பொருள்கோளும் - தாப்பிசைப் பொருள்கோளும் - அளைமறிபாப்புப் பொருள் கோளும் - கொண்டுகூட்டுப் பொருள்கோளும் - அடிமறிமாற்றுப் பொருள் கோளும் - எனப்படும். இவற்றை யினி யொவ்வொன்றாக விளக்குதும். - நன்னூல். - "யாற்றுநீர் மொழிமாற்று நிரனிறை விற்பூண், டாப்பிசை யளைமறி பாப்புக் கொண்டுகூட், டடிமறி மாற்றெனப் பொருள்கோ ளெட்டே." இது மேற்கோள். எ-று. (2) | 306. | யாற்றுப் புனலே யடிதொறும் பொருளற வேற்றடி நோக்கா விளம்பலி னாகும். | | (இ-ள்.) யாற்றுநீர்ப் பொருள்கோளா மாறுணர்த்துதும். மற்றடிநோ க்கா தடிதோறும் பொருளற்று வருவதியாற்றுநீர்ப் பொருள்கோ ளெனப் படும். (வ-று.) 'விலைப்பாலி னீர்கலந்து விற்றாலுங் குற்ற, மலைப்பாரைப் பேணா மறுத்தலுங் குற்ற, நிலைப்பாரைத் தூக்கி நெகிழ்தலுங் குற்றங், கொலைப்பால குற்றமே யாம்." எ-ம். பிறவுமன்ன. - நன்னூல். - "மற்றயனோக்கா தடிதொறும் வான்பொருள், |
|
|