அற்றற் றொழுகுமஃ தியாற்றுப் புனலே." இது மேறகோள். எ-று. (3) | 307. | மொழிமாற் றென்ப மொழிகடம் பயன்படும் வழிபெயர்த் தோரடி வரையுட் கொளலே. | | (இ-ள்.) மொழிமாற்றப் பொருள்கோளாமாறுணர்த்துதும். ஓரடி யெல்லையுட் டத்தம்பொருளுக் கேற்றமொழிக டன்னிலைதப்பி யொழுங்குமாறச் சொல்லுவது மொழிமாற்றுப் பொருள் கோளெனப்படும். (வ-று.) கரையாடக் கெண்டை கயத்தாட மஞ்ஞை, சுரையாழ வம்மி மிதப்ப - வரையனைய, யானைக்கு நீத்து முயற்குநிலை யென்ப, கானக நாடன் சுனை." எ-ம். இதனுட் கெண்டை கயத்தாட - மஞ்ஞை கரையாட வெனவும், சுரை மிதப்ப - வம்மி யாழ வெனவும், யானைக்குநிலை - முயற்குநீத் தெனவும், கொள்ளவே ண்டலி னோரடியுண் மொழிகளை மாற்றினவாறு காண்க. - நன்னூல். - "ஏற்ற பொருளுக் கியைபு மொழிகளை, மாற்றியோ ரடியுள் வழங்கன்மொ ழிமாற்றே." இது மேற்கோள். எ-று. (4) | 308. | நிரனிறை யாநிரை நிறீஇய பெயர்வினை யிரண்டும் வேறடுக்கி யெதிரினும் வைத்த நிரையினும் பொருளே நேர்த லென்ப. | | (இ-ள்.) நிரனிறைப் பொருள்கோ ளாமாறுணர்த்துதும். பலபெயர்ச் சொல்லையும், பலவினைச்சொல்லையும், வேறாயடுக்கிய பின்னரவற்றிற்குப் பொருளாய் வருஞ்சொற்களை முறையேயாயினு மீறுமுதலாக வெதிரே யாயினு மடுக்கிவைப்பது நிரனிறைப்பொருள் கோளெனப்படும். (வ-று.) "கொடிகுவளை கொட்டை நுசுப்புண்கண் மேனி, மதிபவள முத்த முகம் வாய் முறுவல், பிடிபிணை மஞ்ஞை நடைநோக்கஞ் சாயல், வடிவினளே வஞ்சி மகள்." இது பெயர்நிரனிறை. - "காதுசேர் தாழ்குழையாய்க் கன்னித் துறைசேர்ப்ப, போதுசேர் தார்மார்ப போர்ச்செழிய - நீதியான், மண்ணமிர்த மங்கையர்தோண் மாற்றாரை யேற்றார்க்கு, நுண்ணிய வாய பொருள்." இது வினை நிரனிறை. - "காதமரு கவினுதி துனிகண் புருவஞ், சீதமுகங் கொங்கை திரண்டவா - யோதக், கரும்பா ரமழ்பாடிக் காங்கேயன் பட்டத், தரும்பார் குழலளகத் தார்க்கு." இது எழுத்து நிரனிறை. - "கூற்றுவனை வின்மதனை யரக்கர் கோவைக் கூனிலவைக் குஞ்சரத்தை யிஞ்சி மூன்றை, யேற்றுவன புறவுருவ மாளத் தோள்க ளிறவெறிப்ப வி மயப்பெண் வெருவ வேவக், காற்றொழிலா னயனத்தால் விரலாற் கற்றைக் கதிர்முடியாற் கரதலத்தாற் கணையாற் பின்னு, மூற்றழிய வுதைத்து ரித்து நெரித்துச் சூடி யுரித்தெரித்தா னவனெம்மை யுடைய கோவே." இது முறை நிரனிறை. - நன்னூல். - "பெயரும் வினையுமாஞ் சொல்லையும் பொருளையும், வேறு நிரனிறீஇ முறையினு மெதிரினு, நேரும் பொருள் கோ ணிரனிறை நெறியே." இது மேற்கோள். எ-று. (5) |
|
|