309. | பூட்டுவில் லென்ப பூட்டிய விற்போற் பாட்டிரு தலையொரு பாற்பொருள் கொளலே. | |
(இ-ள்.) பூட்டுவிற்பொருள்கோ ளாமாறுணர்த்துதும். பொருளைக் கொள்ளும்படி பாவின் முதலினு மீற்றினு நின்ற விருமொழி கூட்டவே ண்டுழி யது பூட்டுவிற் பொருள்கோ ளெனப்படும். (வ-று.) "திறந்திடு மின் மீன்முடியுஞ் செங்கதிரோன் றன்சூட், டிறந்திடு வில்லாடை யெழிலுஞ் - சிறந்திடுமின், றண்ணாரமாய் மதியந்தாங் கடியும் பூண்டாளைக், கண்ணாரக் காணக் கதவு." எனத் திறந்திடுமின் கதவென்பது பொரு ளாகையிற் பூட்டுவிற் பொருள்கோளா மெனக் கொள்க. - நன்னூல். - "எழுவா யிறுதி நிலைமொழி தம்முட், பெருணோக் குடையது பூட்டுவில்லாகும்." இது மேற்கோள். எ-று. (6) |
310. | தாப்பிசை முதற்கடைத் தன்பொரு டருமொழி யாப்பிசை யிடையே யியம்புத லென்ப. | |
(இ-ள்.) தாப்பிசைப்பொருள்கோளாமாறுணர்த்துதும். பாவினடுவே நின்ற மொழி முதலினு மீற்றினுங் கூட்டிய பொருளைக் கொள்வது தாப்பிசைப் பொருள்கோ ளெனப்படும். (வ-று.) "நோயிடு மென்றஞ்சிநுதலற் கத்தியவையே, நோயிலதாஞ் செய்யாத கால்." என இதனுட்டீயவையென விடைநின்ற மொழியே முதலினு மீற்றினுங் கூட்டிய பொருளைக்கொள்ளுமாறு காண்க. - நன்னூல். - "இடைநிலை மொழியே யேனையீ ரிடத்தும், நடந்து பொருளை நண்ணுத றாப்பிசை." இது மேற்கோள். எ-று. (7) |
311. | அளைமறி பாப்பே யந்த மொழிமற் றுளவிடத் துய்த்துத்தன் னுரைப்பொருள் கொளலே. | |
(இ-ள்.) அளைமறிபாப்புப் பொருள்கோளாமாறுணர்த்துதும். செய் யுளீற்றினின்ற மொழியே யிடையினு முதலினுங் கூட்டிப் பொருளைக் கொள்வதே யளைமறிபாப்புப் பொருள்கோளெனப்படும். (வ-று.) விருத்தம். - "தாழ்ந்த வுணர்வினராய்த் தாளுடைந்து தண்டூன்றித் தளர்வார் தாமுஞ், சூழ்ந்த வினையாக்கை சுடவிளிந்து தீநரகிற் சூழ்வார் தாமு, மூழ்ந்த பிணி நலிய முன்செய்த வினையன்றே முனிவார் தாமும், வாழ்ந்த பொழுதின்னே வானெய்து நெறிமுன்னி முயலா தாரே." என முயலாதாரென் றீற்று நின்ற மொழியே யிடையினு முதலினுங் கூட்டிப் பொருளைக் கொள்ளுமாறு காண்க. அன்றியு மொருசொல் லோரிடத்து நின்று செய்யுட் பல விடத்து நின்ற சொற்களோடு பொருந்திய பொருளை விளைப்பது தீவக மென்பார். அது, முத - லிடை - கடை - வரப்பெறும். வரின் முதனிலைத் தீவக - மிடைநிலைத்தீவகங் - கடைநிலைத்தீவக - மெனப்படும். - "நன்னூல். - செய்யு ளிறுதி மொழியிடை முதலினு, மெய்திய பொருள்கோ ளளைமறி பாப்பே." இது மேற்கோள். எ-று. (8) |