23 | மூன்றாவதெழுத்தின்விகாரம் | புணருங்கால் ஒற்றிரட்டாவெனக் கொள்க. (உ-ம்.) ஆகறந்தன, மாபயந்தன, ஆசிறிய, மாபெரிய, எ-ம். கேண்மியாகோதாய், சொன்மியாபாவாய், எ-ம். தின்னாகுதிரை, கடலோடா கால்வனெடுந்தேர், எ-ம். இவற்றைச் சிறப்பித்து விளக்கினமையால் ஆவீற்றமற்றைப் பெயரும், முற்று வினையல்லன வினையும்வரின் வல்லின மிரட்டுமெனக் கொள்க. (உ-ம்.) புறாப்பறப்பன, கடாப்பெரிய, மிடாச்சிறிய, ஓடாக்குதிரையுமுழாக்காளையுமாகா. ஓடாத உழாத என வரின் வல்லினமிரட்டா. - நன்னூல். "அல்வழியாமா மியாமுற்றுமுன்மிகா." எ-து. மேற்கோள். எ-று. (12) | | 33. | தனிக்குறிலீற்றாத் தகும்பெயர்செய்யுட்கே ஆஅவ்வாதலுமதனோ டுவ்வணையலுமாம். | | | (இ-ள்.) செய்யுளிடத்துத் தனிக்குறிற்கீழே ஆகாரவீற்றுச்சில பெயர் முன்னே பலபெயர் வருங்கால் அவ்வாகாரங்குறுகி அகரமாகவும், அகரமாயினபின் உகரமிணைந்து வரவும், பெறுமெனக்கொள்க. (உ-ம்.) சுறமறிவனதுறையெலா நிலவிரிகானல்வாய், எ-ம். நிலவுபாய்ந்த கடலிற் சுறவுபாய்ந்து களித்தன, எ-ம். இருவகை விகாரம் வந்தவாறுகாண்க. அன்றியும். (உ-ம்.) இரா-இரவு, புறா-புறவு, சுறா-சுறவு, நிலா-நிலவு, விளா-விளவு, பலா-பலவு, என இயல்பாகியுங் குறுகியும் உகரம்பெற்றும் வழக்கிடத்துவரும் - நன்னூல். "குறியதன்கீழாக்குறுகலு மதனோ, டுகரமேற் றலுமியல்புமாந்தூக்கின்." எ-து. மேற்கோள். எ-று. (13) | | 34. | தமிழ்வேற்றுமைக் கச்சாரவும்பெறுமே. | | | (இ-ள்.) தமிழ் என்னுஞ்சொல்லே வேற்றுமைப்பொருளாக வருங்கால் அகரச்சாரியை பெற்றும், பெறாமையும், வருமெனக்கொள்க. (உ-ம்.) தமிழ்க்கூற்று, தமிழ்ச்சொல், என அகரச்சாரியை பெறாது வந்தன. தமிழப்பல்லவதரையர், தமிழநாகன், தமிழவளவன், தமிழவரசன், என அகரச்சாரியைபெற்று வந்தன. - நன்னூல். "தமிழவ்வுறவும் பெறும் வேற்றுமைக்கே." எ-து. மேற்கோள் எ-று. (14) | | 35. | தனிவழிஐயுந் தனிக்குறில்யவ்வுந் துவ்வுநொவ்வுந் தொடர்மெலிமிகுமே. | | | (இ-ள்.) ஓரெழுத்து மொழியாகவரும் ஐகாரமும், தனிக்குற்றெழு த்துக் கூடின யகரமும், ஏவற்சொற்களாகிய, து, நொ, என்றிருமொழிகளும் நிலைப்பதமாகி, வரும்பதமுதற்கண் மெல்லினம் புணரின் அல்வியானும் வேற்றுமையானும் ஒற்றிரட்டும். (உ-ம்.) கை + மாறினது = கைம்மாறினது, கை + மாற்று = கைம்மாற்று, கை + ஞான்றது = கைஞ்ஞான்றது, கை + நீண்டது = கைந்நீண்டது, மெய் + ஞான்றது = மெய்ஞ்ஞான்றது, |
|
|