எ-து. கடையீரடி மடக்கு. "நலத்தகை பிறவிரு சரண மேத்துநங், குலத்தகை பணிகொ ளேகம் பரத்தனே, நலத்தகை மக ளொரு பாக நண்ணுமெங், குலத்தகை பணிகொ ளேகம் பரத்தனே." எ-து. இரண்டாமடியு மீற்றடியு மடக்கு. இவையாறு மீரடி மடக்கு. "காமரம் பயினீர் மதுகரங், காமரம் பயினீர் மதுகரங், காமரம் பயினீர் மதுகர, நாமர நதையுற நிலையார் நமர்." எ-து. ஈற்றடி யொழித்தேனை மூன்றடியு மடக்கு. "கடிய வாயின காமரு வண்டின, மடிய வாமகன்றாருழை வாரலா, கடிய வாயின காமரு வண்டினங், கடிய வாயின காமரு வண்டினம்." எ-து. இரண்டாமடி யொழித்தேனை மூன்றடியு மடக்கு. "கோவளர்ப்பன கோனகரங்களே, கோவளர்ப்பன கோனகரங்களே, மேவளக்கர்வியன் றிரைவேலைசூழ், கோ வளர்ப்பன கோனகரங்களே." எ-து. ஈற்றய லடியொழித்தேனை மூன்றடியு மடக்கு. "வரியவாங்குழன் மாதரிளைங்கொடி, யரியவாங்கயத் தானவ னங்களே, யரியவாங்கயத் தானவனங்களே, யரிவாங்கயத் தானவனங்களே." எ-து. முதலடி யொழித்தேனை மூன்றடியு மடக்கு. இவை நான்கு மூன்றடி மடக்கு. "வானகந்தரு மிசையவாயின, வானகந்தரு மிசையவா யின, வானகந்தரு மிசையவாயின, வானகந்தரு மிசையவாயின." எ-து. நான்கடிமடக்கு. இதனையே யேகபாதமென்க. அன்றியும், ஒருசொல்லே நான்கடியாய் மடக்குமென்பார். (வ-று.) "மாதானு மாதானு, மாதானு மா தானு, மாதானு மாதானு, மாதானு மாதானு.' எ-து. முற்றுமடக்கு. "பணி பவ னந்தமதாக மன்னுவார், பணிபவ னந்தமதாக மன்னுவா, ரணியன மேயதுமன் பராகமே, யணியன மேயதுமன் பராகமே." எ-ம். "கலைநிலா வருமாலை மணங்கொள்வான், மலையமாருத மாறலமாதர்கண், கலைநிலாவரு மாலை மணங்கொள்வான், மலையமாருத மாறலமாதர்கண்." எ-ம். "ஓதநின் றுலவா வரும்வேலைவாய், மாதரங்க மலைக்குநிகரவே, யோதநின்றுல வாவ ரும் வேலைவாய், மாதரங்க மலைக்குநிகரவே." எ-ம். வரும். பிறவுமன்ன. "மாலை மாலை யாகவே யனங்கவேள் பயிறரு, மாலை மாலை வேட்டவர் மனங்கலே றவன்றுழாய், மாலை மாலை யோவுடைத் ததுநினைந் தெழுதரு, மாலை மாலை யாவுடை யவரைவந் திடர்செயும்." எ-து. இடையிட் டிறுதி முதன்மடக்கு. "கயலே தாவருங் கடிபுனற் காவிரி, காவிரி மலருங் கரைபொரு மரபு, மரவம் பூஞ்சினை வண்டொடு சிலம்புஞ், சிலம்பு சூழ்தருந் தளிரடி மனைக் கயலே." எ-து. அந்தாதிமடக்கு. அன்றியும். தண்டியலங்காரம். - "ஓரெழுத்து மடக்கலு முரித்தென மொழிப." என்றார். (வ-று.) "நாநா நாதங் கூடிசை நாதந்தொழி லோவாய், தாதா தார மாக விரைத்தண் மலர் மீதே, வாவா வார்தண் சோலையில் வாழும் வரிவண்டே, யாயா யானிற் சேர்த்துவ தன்பர்க் குரையாயால்.' ஓரெழுத்து மடக்கு. (2) | 316. | இசையந் தாதியே யீற்றுச் சொன்மீண் டிசைபெற வுருபுவே றெனினு மியைதலே. | |
|
|