றிரிசொல்வந்தொன்று சொல்ல மற்றொன்று பொருளிசைத்தற் கிதமாக வரி னிசையெஞ்சணியென் மருமுளரே. ஆயினு மினிவரும்படி யிது சிலேடை யென்று பொருளணி யாகும். அச்சத்தின் குறிப்புச் சொல்லும், சீக்கிரத்தின் குறிப்புச் சொல்லும், முதலிய வந்தவற் றவற்றிற்குரிய வினைச் சொல்லெஞ்ச வருவன குறிப்பெஞ்சணி யெனப்படும். 'துண்ணென நின்றான்.' 'ஐயெனப்போனான்.' என்பன துண்ணென வெருவி-யையயென விரைந்தெனக் - கூட்டி யவ்வவச் சொல் குறித்த வினையோடு முகிக்க வேண்டலிற் குறிப்பெஞ் சணியாயின. அன்றியுமொன்று சொல்லிக் குறித்த மற்றொரு பொருளைத் தோற்றுவித்தல் குறிப்பெஞ்சணி யென்மரு முளரே. ஆயினு மினிவரும்படி யிது நுட்ப மென்று பொருளணி யாகும். ஆகையிற் சொல்லெஞ்சணி யீரைந்தும் வந்தவாறு காண்க. - நன்னூல். - "பெயர்வினை யும்மைசொற் பிரிப்பென வொழியிசை, யெதிர்மறை யிசையெனுஞ் சொல்லொழி பொன்பதுங், குறிப்புத் தந்த மெச்சங் கொள்ளும்." - தொல்காப்பியம். - "அவற்றுட் பிரிநிலை யெச்சம் பிரிநிலை முடிபின. - வினை யெஞ்சு கிளவிக்கு வினையுங் குறிப்பு, நினையத் தோன்றி முடிபா கும்மே. யாவயிற் குறிப்பே யாக்கமொடுவருமே. - பெயரெஞ்ச கிளவி பெயரொடு முடிமே. - ஒழியிசை யெச்ச மொழியிசை முடியின. - எதிர்மறை யெச்ச மெதிர்மறை முடிபின. - உம்மை யெச்ச மிருவீற் றானுந், தன்வினை யொன்றிய முடிபா கும்மே. - தன்மேற் செஞ்சொல் வரூஉங் காலை, நிகழுங்கால மொடு வாராக் காலமு, மிறந்த காலமொடு வாராக் காலமு, மயங்குதல் வரையார் முறை நிலையான. - எனவெ னெச்சம் வினையொடு முடிமே. - எஞ்சிய மூன்றின் மேல்வந்து முடிக்கு, மெஞ்சு பொருட்கிளவி யிலவென மொழிப. - அவைதாந், தத்தங் குறிப்பி னெச்சஞ் செப்பும். - சொல்லெ னெச்ச முன்னும் பின்னுஞ், சொல்லள வல்ல தெஞ்சுத லின்றே. - அவை யல கிளவி மறைத்தனர் கிளத்தல்." - இவை மேற்கோள். எ-று. (2) | .................................. | நான்காவது:-சொல்லொப்பணி. | 4. Comparison. | 320. | ஒப்பணி திரிபியை பொழுகிசை யியைபிசை தப்பில் சமமெனத் தகுநால் வகையே. | | (இ-ள்.) நிறுத்த முறையானே சொல்லொப்பணி யிலக்கணமாமா றுணர்த்துதும். இவை யொப்புமையைப்பற்றி வருவன வாகையில் சொல் லொப்பணி யெனவழங்கும். இவையே திரிபியைபு - மொழுகிசையு - மியை பிசையுஞ் - சமமு - மென நால்வகையாகும். இவற்றைத் தனித்தனி விளக்குதும். எ-று. (1) | 321. | திரிபியை பொருமொழி சேர்பல் லுருபு முருபொன் றணைபல வுரையு மென்ப. | |
|
|