(இ-ள்.) திரிபியைபணியாமாறுணர்த்துதும். ஒருபெயரு மொருவினையும் பலவேறுருபுபெற்றும், பலபெயர் பலவினை யோருருபுபெற்றும், பல வழிவரத்தொடுப்ப தியைபு திரிபாகித் திரிபியைபெனப்படும். (வ-று.) - தேம்பாவணி. - "மாண்டகையா ரறஞ்சார்பா ரல்லதின மனுச்சாரா, ராண் டகையா ரருட்சாரார்க் கல்லதொரு துயர்சாரா, சேண்டகையா ரிவன்சார்பாற் செல்லுதுநா மெனவானார், பூண்டகையா லறஞ்சார்ந்தாள் புரசாரப் புகல்செய்தாள்." எ-ம். இதனுளியைந்த வொரு சொல் லாறுதிரிபாக வந்தவாறு காண்க. - தாழிசை. - "வழுவார்க்கு நீநிலையே மருள்வார்க்கு நீதெளிவே, யழுவார்க்கு நீகளியே யயர்வார்க்கு நீதிதியே, கல்லார்க்குக் கலைக்கடனீ கடவார்க்கு நிலைத்திறநீ, யில்லார்க்கு மிரணியநீ யெல்லார்க்கு மெல்லாநீ." எ-ம். "விரைவினாற் காற்றெனவு முழக்கத்தாற் கடலெனவு மச்சத்தா லிடியெனவுஞ் செய்குலையாற் கூற்றெனவு மதகரிவந் தெதிர்த்த படை முருக்கினதே." எ-ம். இவற்றுட் பலபெயரோருருபு பெற்றுத் திரி பியைபாயினவாறு காண்க. எ-று. (2) |
322. | ஒழுகிசைச் சீரொத் தொழுகிய செய்யுள்போல் வழுவில வியற்றமிழ் வருதலு மாகும். | |
(இ-ள்.) ஒழுகிசையணியாமாறுணர்த்துதும். மேற்காட்டிய செய்யு யிலக்கணத்தா லொத்தசீரொடு வருவதொழுகிய வோசை யென்பது போல வியற்றமிழிடத்தும் பெயரு மீரெச்சமு முரிச்சொல்லு மிடைச் சொல்லும் பலபல வசனத்தி லொப்பவந்து வருமெழுத் தெண்ணு மொன்றுவ தொழுகிசை யலங்கார மெனப்படும். (வ-று.) 'விடாது நறுநெய் பூசி நீங்கா தொளி மணிசேர்த்தி மங்கா மதுமலர் சூடி யொழுங்கிட வகுத்து வனப்புறவளைத்துப் புடைப்பெழச் சொருகித் தமக்கழகாகவும் பிறர்க் கிழிவாகவும் நள்ளிருட் கூந்தலை யளகமாக சேர்த்துவ ரிழிவிலை மாதரன்றோ.' எ-று. (3) |
323. | இயைபிசை சொல்லுரு பீற்றிலொத் தாதலே. | |
(இ-ள்.) இயைபிசையணியாமாறுணர்த்துதும். பற்பல வசனத்திறுதி மொழிகடம்மு ளுருபினொப்புமையா லியைந்துவருவ தியைபிசை யலங் காரமெனப்படும். இதுவே செய்யுளிலக்கணத் தியைபுத் தொடையென் றெண் விகற்பமாக வழங்குவ தெனக் கண்டுணர்க. (வ-று.) 'செங்கதிர் நெடுங்கை நீட்டி மல்கிருட் கங்குலோட்டிப் படரொளி முகத்தைக்காட்டிப் பருதியே கடன்மேலெழுந்துழிச் செவ்விதட்டாமரை பூப்பச் சோலைவாய்ப் பறவைகளார்ப்ப வம்புவி யிராவிருணீப்ப வணியழகொப்பொன் றிலதே.' என வியற்றமிழ். இனிச் செய்யு ளியைபிற் குதாரணந் தொடை விகற்பத்துடன் காண்க. எ-று. (4) |
324. | சமமென்ப மாத்திரை தவுதல் வேற்றெழுத் தொன்றுற லன்றி யொன்றிய சொல்லே | |