வருமெனக் கொள்க. (வ-று.) 'பவளத் தன்ன செவ்வாய்.' இது பண்புவமை. 'அரிமாவன்ன போர்முகத் துப்பகை செகுத்தான்.' இது தொழிலுவமை. 'மாரியன்ன பொழிவண் கையான்.' இது பயனுவமை. அன்றியும், 'பிறைபோலும் வாணுதல்.' இது ஒரு பொருட் கொரு பொருளுவமை. 'பிறைபோலுங் கூனெயிறு.' இது பலபொருட் கொரு பொருளுவமை. 'சோனை யம்புத்திர ளொப்பக் கணைதொடு வில்லான்.' இது ஒரு பொருட்குப் பலபொரு ளுவமை. 'தேனணி கோதையார் சென்றணு கத்தா னடுவே, மீனணி திங்கணேர்வேய்ந் துற்றாள்.' இது பலபொருட்குப் பல பொருளுவமை. - தண்டியலங்காரம். - "பண்புத் தொழிலும் பயனுமென் றிவற்றி, னொன்றும் பலவும் பொருளொடு பொருள்புணர்ந், தொப்புமை தோன்றச் செப்புவ துவமை." இது மேற்கோள். எ-று. (3) | 329. | உவமை விகற்பித் துரைக்குங் காலை விரிவே தொகையித ரேதரம் விபரித மறுபொரு ணியம மைய மின்சொல் கூடா வுவமை கோத்த மாலை யுண்மை யெனவிவை யுவமை வகையே. | | (இ-ள்.) உவமை யலங்காரமாமாறுணர்த்துதும். எல்லா வலங்காரத் துள்ள முவமை யலங்காரஞ் சிறப்புடைத் தென்பார். என்னை. பல நிற மதுமலர் சேர்த்திய படலைமாலை போலவு நால்வகைச் சாந்துங் கூட்டி நனி கமழ் கலவை போலவு மிவ்வலங் காரத்தானும் பலவகைப் பொருளை யொருப்படத் தோற்றித் தருதலாற் கேட்பார்க் கிதுவே சிறந்த வின்பம் பயக்கு மென்றுணர்க. உவமித்த பொருளு முவமைப் பொருளு முவமித்தற்குக் காரணமாகி யவ்விரண்டிற்கும் பொதுவாய் நிற்குங் குணமுந் தொழிலும் பயனுங் கூடக் காட்டி தண்டி யலங்காரத்தில். - "போல மானப் புரையப் பொருவ, நேரக் கடுப்ப நிகர்ப்ப நிகர, வேர வேய மலைய வியைய, வேற்ப வெள்ள வுறழ வொப்ப, வன்ன வனைய வமர வாங்க, வென்ன விகல விளைய வெதிரத், துணைதூக் குண்டார் நகைமிகு தகைவீ, றனைகே ழற்றுச் செத்தொடு பிறவு, நவைதீர் பான்மை யுவமைச் சொல்லே." என் னுமுருபுகளா லவற்றைப் பணிந்து வருவதுவமை யியல்பெனக் கொள்க. இவ்வலங்காரத்தைப் பிரித்துப் பல விகற்பமாக வகுத்தார் புலவர். அவற்று ளீண்டு விரிவு முதற்கொண் டுண்மை யீறாகப் பதினொரு விகற்பங்களுந் தொகுத் துரைத்தவாறு காண்க. சூத்திரத்துள் ளெனவிவை யென்ற மிகையால், சமுச்சயம் - புகழ்தல் - நிந்தை - தெரிதரு தேற்றம் - இயம்புதல் வேட்கை - பலபொருள் - விகாரம் - மோகம் - அபூதம் - பலவயிற்போலி - ஒருவயிற் போலி - பொது நீங்கு - அநியம - முதலிய வுவமை யலங்காரங்களும் வரும். சமுச்சயவுவமை யாவது:- அதனானேயன் றிதனையீதொப்பதினாலு மொக்குமென்பது. (வ-று.) "அளவேய் வடிவொப் பதன்றியே பச்சை, யிளவேறு |
|
|