ஒப்புமைக் கூட்ட வுவமை. "உண்ணீர்மை தாங்கி யுயர்ந்த நெறியொழுகி, வெண்ணீர்மை நீங்கி விளங்குமாற் - றண்ணீர்த், தரம்போலு மென்னத்தரு கடம்பை மாறன், கரம்போற் கொடைபயில்வான் கார்." இது தற்குறிப்பே ற்றவுவமை. "குழைபொருது நீண்டு குமிழ்மேன் மறியா, வுழைபொரு தென்னுள்ளங் கவரா - மழைபோற், றருநெடுங்கைச் சென்னித் தமிழ்நா டனை யார், கருநெடுங்கண் போலுங் கயல்." இது விலக்குவமை. - "வாளரவின் செம்மணியும் வன்னியிளைம் பாசிலையு, நாளிளைய திங்கணகை நிலவு - நீளொளியாற், றேனிலவு பூங்கொன்றைத் தேவர்கோன் செஞ்சடைமேல், வானிலவு விற்போல் வரும்." இது ஏதுவுவமை. பிறவுமன்ன. எ-று. (4) | 330. | விரிவென விருபொருள் விதித்திற முருபிவை தெரிவுற விரித்துச் செப்புதன் மற்றுந் தொகையொப் பாங்குணந் தொழில்பயன் றொகவே. | | (இ-ள்.) விரிவுவமை யலங்காரமுந் தொகையுவமை யலங்காரமு மாமாறுணர்த்துதும். மேற்கூறிய வுவமைப்பொருளு முவமித்தபொருளுங் குண முதலுவமைக்காரண மூன்று முவமையுருபுமென விவையெல்லாந் தோன் றவரின் விரிவுவமையெனவும், மற்றவைதோன்றி யுவமைக்காரண மூன்றுந் தோன்றா துரைப்பி னதுதொகை யுவமை யெனவும் வழங்கும். (வ-று.) 'பவளம்போலுஞ் செவ்வாய். என்பதிதனுள் வாயே யுவமித்தபொருளும் பவளமே யுவமைப் பொருளுஞ் செம்மையே யுவமைக் காரணமாங் குணப்பொருளும் போலுமே யிடைச் சொல்லாகிய வுவமை யுருபுமெனக் கண்டுணர்க. வெண்பா. - "பால்போலு மின்சொற் பவளம்போற் செந்துவர்வாய்ச், சேல்போற் பிறழுந் திருநெடுங்கண் - மேலாம், புயல்போற் கொடைக்கைப் புனனாடன் கொல்லி, யயல்போலும் வாழ்வ தவர்." என்பதிதனுட் குணத்தானுந் தொழிலானும் பயனானும் விரிவுவமை வந்தவாறு காண்க. அன்றியும். "தாமரைபோன் முகத்துத் தண்டரளம் போன்முறுவற், காமருவு வேய்புரைதோட் காரிகையீர் - தேமருவு, பூங்குழலின் வாசப்பொறை சுமந்து நொந்தாற், பாங்குழலுந் தென்றற் பரிசு." எ-ம். பவளம் போலும் வாய், சிங்கம்போலுஞ் சேவகன், முகில்போலுங்கை, இவை குணத்தொழிற் பயனுவமைக் காரண மூன்று முறையே தொக்கு நின்றவாறு காண்க. இவை தொகை யுவமை. எ-று. (5) | 331. | இதரேதர மென்ப விருபொருண் மாறலே. | | (இ-ள்.) இதரேதர வுவமையலங்காரமாமாறுணர்த்துதும். உவமைப் பொருளு முவமித்த பொருளுந் தம்முண் மாறிப் பொருளே யொருகாலுவ மையாகவு முவமை யொருகாற் பொருளே யாகவும் வேறுவேறாய்த் தொடர்ந்து வருவதிதரேதர வுவமை யெனப்படும். என்னை. இதரமெனினும் வேற்றுமை யெனினு மொக்கும். (வ-று.) "களிக்குங் கயல்போல நின்கண்ணின் கண்போற், |
|
|