(வ-று.) ``தாதளவி வண்டு தடுமாறுந் தாமரைகொன், மாதர் விழியுலவும் வாண்முகங்கொ - லேதென், றிருபாற் கவாவுற் றிடையூ சலாடு, மொருபாற் படாதென் னுளம்.ழுழு எ-ம். வெண்பா. - ``வெஞ்சினவே றின் றுலவும் விண்முகிலோ செய்கொலையா, லெஞ்சினபோ ரீற்றுலவுங் குஞ்சரமோ-நெஞ்சி, லொருபாற்குந் தேறா வுளந்தேற் றினெனீண், டிருபாற்கு மோடனன் றென்று.ழுழு எ-ம். பிறவுமன்ன. எ-று. (10) | 336. | இன்சொல் லுரிமையா மிணையிவை யென்ற பின்சொல் லியபொருட் பெற்றிமி யுரைத்தலே. | | (இ-ள்.) இன் சொல்லுவமை யலங்காரமாமாறுணர்த்துதும். ஒன் றை யுவமித்தபின்பு பொருளின் சிறப்பெலா முவமைக்கில்லை யென்று காட்டுவதின்சொல்லுவமை யெனப்படும். (வ-று.) ``மான்விழி தாங்கு மடக் கொடியே நின்வதன, மான்முழுதுந் தாங்கி வருமதிய - மானாலு, முற்றிழை நல்லாய் முகமொப்ப தன்றியே, மற்றுயர்ச்சி யுண்டோ மதிக்கு.ழுழு எ-ம். வெண்பா. - ``சூழுடுவும் பாற்கதிருந் தோன்றி மறுத்தொன்றாக், காழுரு வுந் தேயாது கன்னித்தாய் - வாழுந், தளராவா றொண்முகங்கண் டேங்கிற்றோ தாட்கீழ், வளராவா றென்னோ மதி.ழுழு எ-ம். பிறவுமன்ன. எ-று. (11) | 337. | கூடா வுவமையே கூறிய நிகர்க்கண் ணூடா தவைபொருட் குரியன வெனலே. | | (இ-ள்.) கூடாவுவமை யலங்காரமாமாறுணர்த்துதும். உவமைப்பொ ருட்கட் கூடாதவை தானெடுத்த பொருட்கட் கூடுமென்று காட்டல் கூ டாவுவமை யெனப்படும். (வ-று.) ``சுடுமதிபோ லுன்முகம், இருபொழு தும் வாய்மலருந் தாமரையே நின்முகம்.ழுழு - விருத்தம். - ``மருட்கொள்ளா வுவாக்கொள்ளா மணிக்கடல்போல் கன்மனமே, யிருட்கொள்ளா நிழற் கொள்ளு மிணர்ப்பொழில்போ லருந்தயையே, வெருட்கொள்ளா விடியாப்பெய் வியன்முகிற்போற் கைக்கொடையே, கருட்கொள்ளா நிழற் சோலைக் காவனலூர்த் தாயியல்பே.ழுழு எ-ம். ``சந்தனத்திற் செந்தழலுந் தண்மதியில் வெவ்விடமும், வந்தனவே போலுமா னின்மாற்றம் - பைந்தொடியாய், வாவிக் கமலமலர் முகங்கண் டெக்கறுவா, ராவிக் கிவையோ வரண்.ழுழு எ-ம். பிறவுமன்ன. எ-று. (12) | 338. | மாலை யுவமையா மருவிய பலநிகர் மாலையாக் கோத்தபின் வனைபொரு ளியம்பலே. | | (இ-ள்.) மாலையுவமையலங்காரமாமாறுணர்த்துதும். படலைமாலை போலொரு பொருட்குப் பலபல வுவமை தொடர்ந்து கூறிக் கடையிற் பொருளை யுரைப்பது மாலையுவமை யெனப்படும். (வ-று.) தேம்பாவணி. - ``நிறைதவிர்ந் துணர்ந்த காம நெறியிற் கைப்பொருளே போன்று, முறைதவிர்ந் தடைசீர் போன்று |
|
|