முனிகடம் முனிவு போன்றும், பொறைதவிர்ந் திழித் தீண் டோடும் புனலினை யெதிர்கொண் டாங்கத், துறைதவிர்ந் திடத்திட் டேகித் துளித்ததேன் முல்லை சேர்ந்தார்." என வரும். "நீரெழுங் குமுழிபோன்று நெடியதேர் நேமி போன்றுங், காரெழு மின்னுப் போன்றுங் கடலெழுந் திரைகள் போன்றும், பாரெழுஞ் செல்வத் தில்லைப் பதியு மோர் நிலையு மென்றார், சீரெழு ஞானத் திற்குந் திரைதிரண் டலைவ துண்டோ." எ-ம். "மலையத்து மாதவனே போன்று மவன்பா, லலைகடலே போன்று மதனுட் - குலவு, நிலவலையமே போன்று நெறியன்பா னிற்குஞ், சிலை கெழு தோள்வேந்தர் திரு." பிறவுமன்ன. (13) | 339. | உண்மை யுவமையா முவமை மறுத்தென நுண்மையிற் பொருடிற நுவன்று விளக்கலே. | | (இ-ள்.) உண்மையுவமை யலங்காரமாமாறுணர்த்துதும். உவமை மறுத்துப் பொருளைக் கூறுவ துண்மை யுவமை யெனப்படும். (வ-று.) 'தாமரை யன்று முகம்.' 'வண்டல்ல கருங்கண்.' எ-ம். வெண்பா. - "அஞ்சன்மின் மாங்குயில்கா ளங்கண்வா னொத்திருளு, மஞ்சன்றே மஞ்சிடித்த வார்பன் றே-யெஞ்சாது, காய்ந்தெழுந்தேம் பூம்புகையாய்க் காவனலூ ராளரசாள், வேந்தெழுந் தேரோடும் விரைவு." எ-ம். "தாமரையன் றுமுகமே யீதிங் கிவையுங், காமருவண் டல்லகரு நெடுங்கண் - டேமருவு, வல்லியி னல்ல ளிவ ளென்மனங்கவரு, மல்லிமலர்க் கோதை யாள்." பிறவுமன்ன. எ-று. (14) | 340. | உவமை வழுவென்ப வுரியபான் மாற றவன்மிக லுயர்த றாழ்தலென் றைந்தே. | | (இ-ள்.) உவமை வழுவலங்காரமாமாறுணர்த்துதும். ஒன்றனை யுவ மித் துரைக்குங் காலை வழுவுறாமை வேண்டி யவற்றை யறிந்து காத்தல் கல்வி வல்லோர் கடன். அவையாவன:- ஆண்பான் முதற்பா லைந்துந் தம் முண்மாறி வருதலும், பொருட்கண்ணுள்ளத்தின் குறைந்தது மிக்கது முவமைக் கண்வருதலு, முயர்ந்த வுவமையோ டிழிந்த பொருளு வமித்தலு, மிழிந்த வுவமையோ டுயர்ந்த பொருளு வமித்தலு, மென் றிவ்வைந்து மோரோ விடத்தோர் சிறப்புக் காட்டுதற் கொழிய வழுவாம். (வ-று.) வெண்பா. - "மன்னவர்க்கு நாய்போல் வனப்புடையா வாள்வயவர், மின்மினி வெஞ் சுடரேபோல் விளங்கு - மன்னப், பெடைபோலுஞ் சந்திரன் பைந் தடங்கள் போலு, மிடைமா சொன்றில்லா விசும்பு." என விதனுள் வீரரை நாய்போல வனப்புடையா ரென்ற திழிந்த வுவமையோ டுயர்ந்த பொருளுவ மித்ததும், வெஞ்சுடர்போல மின்மினி விளங்கு மென்ற துயர்ந்த வுவமையோ டிழிந்த பொருளு வமித்ததும், சந்திரனுக் குவமையாகப் பேடை யன்னம் வைத்த தாண்பாற்குப் பெண்பா லுவமித்ததும், ஒன்றாம் விசும்பிறகுப் பயனில்லாமற் பன்மையிற்றடங்க ளென்ற தொருமைக்குப்பன்மை |
|
|