யுவமித்ததும், என்றிவை யெல்லாங்குற்றமாயிற்று. - வெண்பா. - "நீலப் புருவங் குனிய விழிமதர்ப்ப, மாலைக்குழல் சூழ்ந்த நின்வதனம் - போலுங், கயல்பாய வாசங் கவருங் களிவண், டயல்பாயு மம்போ ருதம்." என்பதிதனுட் புருவமெனும் பொருட் குவமைக் கண்ணொன் றில்லாமையா லுவமை குறைந்து குற்றமாயிற்று. - வெண்பா. - "நாட்டந் தடுமாறச் செவ்வாய் நலந்திகழத், தீட்டரிய பாவை திருமுகங் - காட்டுமாற், கெண்டை மீதாட நறுஞ்செயிதழ் கவர, வண்டுசூழ் செந்தா மரை." என்பதித னுண் முகத்திற்குத் தாமரை, விழிக்குக் கெண்டை, வாய்க்குச் செவ்விதழ், உவமையாகி மீண்டுவமைக் கண்வந்த வண்டுக்குப் பொருட்கண் ணொன்றில் லாமையா லுவமை மிக்குக் குற்றமாயிற்று. பிறவுமன்ன. ஆயினு மொரோ விடத்திவை சிறப்புக் காட்ட வழுவே யின்றிப் பயன்பட வரவும் பெறு மெனக் கொள்க. எ-று. (15) | 341. | உருவக மென்ப வுவமை வேறு பொருள்வே றின்றிப் புணரத் தொடுத்தலே. | | (இ-ள்.) உருவக வலங்காரமாமாறுணர்த்துதும். உவமையும் பொரு ளும் வேறுபடாமற் குணந்தொழிற் பயனென முக்காரணந் தோன்றாமலு முவமை யுருபில்லாமலு மொன்றுபட வருமுவமை யுருவக மெனப்படும். இவ்வுருவகமே பதினைந்து வகைப்படும். - தண்டியலங்காரம். - "தொகையே விரியே தொகைவிரி யெனாஅ, வியைபே யியைபின்மை யியனிலை யெனாஅ, சிறப்பே விருப்பஞ் சமாதான மெனாஅ, வுருவக மேக மநேகாங்க மெனாஅ, முற்றே யவையவ மவையவி யெனாஅ, சொற்ற வைம்மூன்று மாங்கதன் விரியே." என்றா ராகலின் - தொகையுருவகமாவது:- மாட்டேற்றுச் சொற்றொகுத்துக் கூறுவது. (வ-று.) "அங்கை மலருமடித் தளிருங்கண் வண்டுங், கொங்கை முகிழுங் குழற்காருந் - தங்கியதோர், மாதர்க் கொடியுளதா னண்பாவதற் கெழுந்த, காதற்குளதோ கரை." என வரும். விரியுருவகமாவது:- அச்சொல் விரிந்து நிற்பது. (வ-று.) "கொங்கை மு கையாக மென்மருங்குல் கொம்பாக, வங்கை மலரா வடித்தளிரா - தங்க, ளளிநின்ற மூர லணங்கா மெனக்கு, வெளிநின்ற வேனிற்றிரு." எனவரும். தொகைவிரி யுருவகமாவது:- அச்சொற் றொக்கும் விரிந்து நிற்பது. (வ-று.) "வையந் தகழியா வார்கடலே நெய்யாக, வெய்ய கதிரோன் விளக்காகச் - செய்ய, சுடராழி யானடிக்கே சூட்டுவன் சொன்மாலை, யிடராழி நீங்குகவே யென்று." எனவரும். இயைபுருவக மாவது:- பல பொருளை யுருவகஞ் செய்யுங்காற் றம்மு ளியைபுடைத்தாக வைத்துருவகஞ் செய்வது. (வ-று.) "செவ்வாய்த் தளிரு நகைமுகிழுங் கண்மலரு, மைவா ரளக மது கரமுஞ் - செவ்வி,யுடைத்தாந் திருமுகமென் னுள்ளத்து வைத்தார், துடைத்தாரே யன்றோ துயர்." என வரும். இயைபின்மை யுருவகமாவது:- பல பொருளுந் தம்முளியையாமலுருவகஞ் செய்வது. (வ-று.) "தேனக்கலர்கொன்றைப் |
|
|