ளொலியும் பெருமையு மொக்கு - மலிதேரான், கச்சி படுவ கடல்படா கச்சி, கடல்படுவ தெல்லாம் படும்." எ-து. கூற்று. "கார்க்குலமும் பாய்திரையுங் காட்டுங் கடல்படையும், போர்க்களிறும் பாய்மாவும் பொங்குமா - லேற்ற, கலமுடைத்து முந்நீர் கதிராழித் தீண்டோர், பலவுடைத்து வேந்தன்படை." எ-து. சமம். "பதுமங் களிக்கு மளியுடைத்துப் பாவை, வதன மதர்நோக்கு டைத்துப் - புதையிருள்சூ, ழப்போ தியல்பழியு மம்போருகம் வதன, மெப்போது நீங்கா தியல்பு." எ-து. உயர்ச்சி. இவை குறிப்பு. அன்றியும், அவ்வேற்றுமை யலங்காரம் பிறவலங்காரங்க ளோடும் வருமாறு. - தண்டியலங்காரம். - "அதுவே, குணம்பொருள் சாதி தொழிலொடு புணரும்." என்றாராகலின். (வ-று.) "சுற்றுவிற் காமனுஞ் சோழர் பெருமானாங், கொற்றப் போர்க்கிள்ளியுங் கோளொவ்வார் - பொற்றொடி, யாழி யுடையான் மகன்மாரன் மாயனே, கோழி யுடையான் மகன்." எ-து. குணவேற்றுமை. "ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி, யேங் கொலிநீர் ஞாலத்திரு ளகற்று - மாங்கவற்றுண், மின்னேர் தனியாழி வெங் கதிரொன் றேனையது, தன்னே ரில்லாத் தமிழ்." எ-து. பொருள் வேற்றுமை. "வெங்கதிர்க்குஞ் செந்தீ விரிசுடர்க்கு நீங்காது, பொங்குமதி யொளிக்கும். போகாது - தங்கும், வளமையான் வந்தநெறி மயக்க மாந்தர்க், கிளைமையான் வந்த விருள்." எ-து. சாதி வேற்றுமை. "புனனாடர் கோமானும் பூந்துழாய் மாலும், வினைவகையான் வேறு படுவர் - புனனாட, னேற் றெரிந்து மாற்றலர்பா லெய்தியபார் மாயவனு மேற்றிரந்து கொண்டமையா லின்று." எ-து. தொழில் வேற்றுமை. எ-று. (18) | 344. | ஒட்டெனத் தன்பொரு ளுரையா துவமை சுட்டலி லப்பொரு டோன்ற வியம்பலே. | | (இ-ள்.) ஒட்டலங்காரமாமாறுணர்த்துதும். தான் கருதிய பொருளை வெளிப்படுத்துதற் கதனைச் சொல்லாததற்குத்தக்க மற்றோருவகைப் பொருளைச் சொல்வதே யொட்டலங்கார மெனப்படும். ஆகையிலிதுவு முவமை விகற்பத்து ளடங்கும். (வ-று.) "ஒண்ணிலவு நீர்மைத்தா யோயாப் பயஞ் சுரந்து, தண்ணளி தாங்கு மலர்முகத்துக் - கண்ணெகிழ்ந்து, நீங்க வரிய நிழலுடைத்தாய் நின்றெமக்கே, யோங்கியதோர் சோலை யுடைத்து." எ-து. இதனுட் டன்னையாதரிக்கும் வள்ளலைக்கருதி யவனையொழித் தவட்கேற்ற வுவமைப் பொருளைக் கூறியவாறு காண்க. அன்றியும். "பனிமதுப்பதுமம் - ஊழியுமரிதே" யென்று, 216-ம். சூத்திரத்தில் வந்த வகவலி லொட்ட லங்காரமாகத் திருக்காவலூர் நாயகி வெளிப்படா தொழித் தவட் கேற்ற வுவமைப் பொருளைக் கூறியவாறு காண்க. அன்றியும், அவ்வலங்காரவிரிவுவருமாறு:- தண்டியலங்காரம். - "அடையும் பொருளு மயல்பட மொழிதலு, மடைபொது வாக்கியாங்ஙன மொழிதலும், விரவததொடுத்தலும் |
|
|