விபரீதப் படுத்தலு, மெனநால் வகையினு மியலுமென்ப." என்றாராகலின். (வ-று.) "வெறிகொ ளினச்சுரும்பு மேய்ந்ததோர் காவிற், குறைபடு தென்றெட்டுங் குறுகு - நிறைமதுச்சேர்ந், துண்டாடுந் தன்முகத்தே செவ்வி யுடையதோர், வண்டாமரை பிரிந்த வண்டு." எ-து. அடையும் பொருளுமயல்படமொழிந்தது. "ஒண்ணிலவு நீர்மைத்தா" யென்ற செய்யுள் அடைபொதுவாய் பொருள் வேறுபட்டது. "தண்ணளிசேர்ந் தின்சொன் மருவுந் தகைமைத்தா, யெண்ணிய மெப்பொருளு மெந்நாளு - மண்ணுலகில், வந்து நமக்களித்து வாழு முகிலொன்று, தந்ததான் முன்னைத் தவம்." எ-து. அடைவிரவிப் பொருள் வேறுபட்டது. "கடைகோ லுலகியற்கை காலத்தின் றீங்கா, லடைய வறிதாயிற் றன்றே - யடைவோர்க், கருமை யுடைத்தன்றி யந்தேன் சுவைத்தாய்க், கருமை விரவாக் கடல்." எ-து. விரவத்தொடுத்தல். பிறவுமன்ன. எ-று. (19) | 345. | அவநுதி யென்ப வாய்மெய் மறுத்துமற் றிவறிய வொன்றனை யேற்றி யியம்பலே யுருவகங் கூட்டி னொண்சிறப் பாகும். | | (இ-ள்.) அவநுதியலங்காரமாமாறுணர்த்துதும். எடுத்தபொருள் மிக த்தோன்ற வதற்குள்ள சிறப்பியல்குண முதலா யவற்றினுண்மை மறுத் தெதிர்மறையாக மற்றொன்றனை யுரைப்ப தவநுதியலங்கார மெனப்படும். தண்டியலங்காரம். - "சிறப்பினும் பொருளினுங் குணத்தினு முண்மை, மறுத்துப் பிறிதுரைப்ப தவநுதி யாகும்." என்றார். (வ-று.) "நறைகமழ் தார் வொட்டார் நலனளித்து நாணு, நிறையு நிலைதளரா நீர்மை - யறநெறிகுழ், செங்கோல னல்லன் கொடுங்கோலன் றெவ்வடுபோர், வெங்கோப மால் யானை வேந்து." எ-து. சிறப்பவநுதி. "நிலனாம் விசும்பா நிமிர்காலாந் தீயா, மலர்கதிராம் வானா மதியா - மலர்கொன்றை, யொண்ணறுந் தாரா னொருவ னுயிர்க் குயிரா, யெண்ணிறந்தா னெப்பொருளுமாம்." எ-து. பொருளவ நுதி. "மனுப்புவிமேல்வாழ மறைவளர்க்கு மார்ப, பனித்தொடையற் பார்த்திவர்கோ னெங்கோன் - றனிக்கவிகை, தண்மைநிழற் றன்று தற்றொழுத பேதையர்க்கு, வெண்மை நிழற்றாவி விடும்." எ-து. குணவவநுதி. அன்றியும், இதனோ டுருவகங் கூட்டிற் சிறப்பாம். (வ-று.) "பொங்களக மல்ல புயலே யிவையிவையுங், கொங்கை யிணையல்ல கோங்கரும்பு - மங்கைநின், மையரிக் கண்ணல்ல மதர்வண்டிவை யிவையுங், கையல்ல காந்தண் மலர்." எ-து. வண்டல்ல கருங்கண்ணென் றுவமை மறுப்ப துண்மை யுவமை யெனவும், கண்ணல்ல வண்டென்று பொருளைமறுப்ப தவநுதி யுருவக மெனவுங் கண்டு கொள்க. எ-று. (20) | 346. | ஊகாஞ் சிதமென்ப வுரிமை யொழித்துமற் றாகோர் குறிப்பொரு ளறைந்து பொருத்தலே. | |
|
|