(இ-ள்.) ஊகாஞ்சித வலங்காரமாமாறுணர்த்துதும். எடுத்த பொரு ட்கண் ணியல்பாயின வற்றைக் கூறினு மவற்றிற்குரிய காரணத்தையொ ழித்து மற்றொன்றன் சிறப்புத் தோன்றக் கவி தான் கருதிய மற்றொரு காரணத்தைக் கூறுவது ஊகாஞ்சித மெனப்படும். இதனைத் தற்குறிப் பேற்ற மென்பாரு முளர். என்னை. ஊகாஞ்சித மெனினுந் தற்குறிப் பெ னினு மொக்கும். அஞ்சித மெனினும் பொருத்த மெனினு மொக்கும். (வ-று.) "மண்படிதோட் கிள்ளி மதயானை மாற்றரசர், வெண்குடைக்கே வைத்த வெகுளியான் - விண்படர்ந்து, பாயுங்கொ லென்று பனிமதியம் போல்வதூஉந், தேயுந் தெளிவிசும்பி னின்று." எ-து. பெயர் பொருள். "வேனில் வெயிற்குலர்ந்த மெய்வெறுமை கண்டிரங்கி, வானில் வளஞ் சுரந்த வண்புயற்குத் - தானுடைய, தாதுமே தக்க மதுவந் தடஞ்சினை யாற், போதுமீ தேத்தும் பொழில்." எ-து. அல்பொருள். - தண்டியலங் காரம். - "பெயர்பொரு ளல்பொரு ளெனவிரு பொருளினு, மியல்பின் விளைத்திற னன்றி யயலொன்று, தான்குறித் தேற்றுத றற்குறிப் பேற்றம்." இது மேற்கோள். எ-று. (21) | 347. | நுட்பமாந் தெளிவுற நுவலாத வற்றையு முட்படுத் திடுங்குறிப் புரையரி துணர்த்தலே. | | (இ-ள்.) நுட்பவலங்காரமாமாறுணர்த்துதும். எடுத்த பொருளை வெளிப்படக் கூறாததுவே தோன்ற வுவமை யாலாயினு முன்பின் வருவதைக் கொண்டாயினு மதனைக் காட்டுங் குறிப்பினை யுரைப்பது நுட்பமெனப்படும். (வ-று.) வெண்பா. - "வற்றிய நீர்ப்பொய்கை மலர்கண் டறிந்தணுகப், பற்றியமாண் பற்றிலர்தம் பாலுறவே - மற்றுவரி, சேர்ந்தகல வெய்யோன் செழும்பொய்கைத் தாமரைகண், டோர்ந்தகல்க நீச ருறவு." என்பதிதனுட் சான்றோ ருறவு துன்பம் வரினு மெந்நாளு மாறாதெனவு நீசருறவு நில்லா தொரு பொழு தெல்லையுண் மாறு மெனவுங் குறிப்பிற் காட்டியவாறு காண்க. "பாடல் பயிலும் பனிமொழிதன் பணைத்தோள், கூடலவாறிற் குறிப் புணர்த்து - மாடவர்க்கு, மென்றீந்தொடை யாழின் மெல்லவே தைவந்தா, ளின்றீங் குறிஞ்சி யிசை." எ-து.| தொழில். - தண்டியலங்காரம். - "தெரிபுவேறு கிளவாது குறிப்பினுந் தொழிலினு, மரிதுணர் வினைத்திற நுட்ப மாகும்." இது மேற்கோள். எ-று. (22) | 348. | புகழ்மாற் றென்ப புகழ்வது போலிகழ்ந் திகழ்வது போற்புகழ்ந் தியம்பிய நிலையே. | | (இ-ள்.) புகழ்மாற் றலங்காரமாமாறுணர்த்துதும். ஒன்றனைப் புகழ்ந்தாற்போல வதனைப் பழித்தலும் பழித்தாற்போல வதனைப் புகழ்தலுமென விருவகையும் புகழ்மாற்றெனப்படும். (வ-று.) வெண்பா. - "உள்ளலும் பின்னுறச்சீ ருய்த்திரவுதீர் மழைபெய், வள்ளலுனை யென்பார் வாழ்த்தறியார்-வெள்வேலோய், |
|
|