மாலையின் மால்கட லார்ப்ப மதன்றொடுக்கு, மாலையின் வாளி மலர்." எ-து. சொற்பின்வருநிலை. - தண்டி யலங்காரம். - "முன்வருஞ் சொல்லும் பொருளும் பலவயிற், பின்வரு மென்னிற் பின்வரு நிலையே." இது மேற்கோள். எ-று. (25) | 351. | முன்ன விலக்கென்ப முன்னத்தின் மறுத்தலே. | | (இ-ள்.) முன்னவிலக்கலங்காரமாமாறுணர்த்துதும். ஒன்றைச்சொல்லி மற்றதைக் காட்டிய குறிப்பினான் மறுத்துவிலக்கல் முன்னவிலக்கலங்கார மெனப்படும். (வ-று.) வெண்பா. - "இன்னுயிர்காத் தளிப்பாய் நீயே விளைவேனின், மன்னவனுங் கூற்றுவனும் வந்தக்கா - லன்னோர், தமக்கெம்மைத் தோன்றா தகைமைத்தோர் விஞ்சை, யெமக்கின் றருள்புரிந்தே யேகு." என்பதிதனுளுயிர்க்காவலனைப் போகச்சொன்னாற் போலாகிக் காட்டி னகுறிப்பினாற் போதல்விலக்கினவாறு காண்க. - தேம்பாவணி. - "அளைவீ ரவூழல் வைகி யாவி னஞ்சயிர்ந் தெஞ்ஞான்றுங், கொலைவீர வூழிச்செந்தீக் குளித்தலே யின்பமாயின், வலைவீர வணியிற் பின்னி மலர்தவிழ் கூந்தல் வெஃகிப், புலைவீர வுணர்ந்த தாமப் புணரியிற் குளிப்பாய் நெஞ்சே." எ-ம். "பாலன்றன துருவாயேழுலகுண் டாலிலையின், மேலன்று நீகிடந்தாய்மெய் யென்ப - ராலன்று, வேலைசூழ் நீரதோ விண்ணதோ மண்ணதோ, சோலை சூழ் குன்றெடுத்தாய் சொல்." எ-து. இறந்தகாலவினை விலக்கு. "முல்லைக் கொடி நடுங்க மொய்காந்தாள் கைகுலைப்ப, வெல்லையின் வண்டெழுந் திரங்கவே - மெல்லியன் மேற், றீவாய் நெடுவாடை வந்தாற் செயலறியேன், போவா யொழிவாய் பொருட்கு." எ-து. எதிர்காலவினை விலக்கு. "மாதர் நுழை நுசுப்பு நோவ மணிக்குழைசேர், காதின்மிசை நீலங் கைபுனைவீர் - மீதுலவு, நீணீல வாட்க ணிமிர்கடையே செய்யாவோ, நாணீலஞ் செய்யு நலம்." எ-து. நிகழ்கால வினை விலக்கு. அன்றியும். | அவ்வலங்கார வேறுபாடு வருமாறு:- தண்டியலங்காரம். - "பொருள்குணங் காரணங் காரியம் புணரும்." என்றாராகலின். (வ-று.) "கண்ணு மனமுங் கவர்ந்தவ ளாடிடமென், றண்ண லருள மடையாளந் - தண்ணிழலின், சுற்றெல்லை கொண்டுலவுஞ் சோதித் திரளல்லான், மற்றில்லைகாணும் வடிவு." எ-து. பொருள் விலக்கு. 'மாதர் துவரிதழ்வாய் வந்தென் னுயிர் கவருஞ், சீத முறுவ லறிவழிக்கு - மீதுலவு, நீண்ட மதர்விழியு நெஞ்சங்கிழித் துலவும், யாண்டையதோ மேன்மை யவர்க்கு." எ-து. குணவிலக்கு. "மதரரிக்கண் சிவப்ப வார்புருவங் கோட, வதரந் துடிப்ப வணிசேர் - நுதர் வியர்ப்ப, நின்பா னிகழ்வனகண் டஞ்சாதா லென்னெஞ்ச, மென்பாற் றவறின்மை யான்." எ-து. காரணவிலக்கு. "மன்னவர் சேயா மயில் கவி யாடலுறும், பொன்னலருங் கொன்றையும் பூந்தளவின் - மென்மலரு, மின்னுயிரா நீண்முகிலு மெய்யென்று கொள்வதே, யென்னுயிரே பின்னு முளது." எ-து. காரியவிலக்கு. அன்றியும், |
|
|