தரப்போ வாமாலை, யிருளோ நிலவோ வெழும்." எனவரும். வெகுளிவிலக் கென்பது:- வெகுளிதோன்றக் கூறிவிலக்குவது. (வ-று.) "வண்ணங் கருக வளைசரிய வாய்புலர, வெண்ணந் தளர வெதிர்நின்று - கண்ணின்றிப், போதல் புரிந்து பொருள்காதல் செய்வீரால், யாதும் பயமிலேம் யாம்." என வரும். இரங்கல் விலக்கென்பது:- இரங்க றோன்றக் கூறி விலக்குவது. (வ-று.) "ஊச றொழிலிழக்கு மொப்புமயிலிழக்கும்,வாசஞ் சுனையிழக்கும் வள்ளலே தேசு, பொழிலிழக்கு நாளையெம் பூங்குழல் விட்டேகி, லெழிலிழக்கு மந்தோ விதண்." எனவரும். ஐயவிலக்கென்பது:- ஐயுற்றதனை விலக்குவது. (வ-று.) "மின்னோ பொழிலின் விளையாடு மிவ்வுருவம், பொன்னோ வெனுஞ்சுணங்கிற், பொற்கொடியோ - வென்னோ, திசையுலவுங் கண்ணுந் திரண முலையுந் தோளு, மிசையிருளுந் தாங்குமோ மின்.' எனவரும். எ-று. (26) | 352. | சொல்விலக் கொன்றனைச் சொல்லிய பின்னஃக தல்லென மறுத்தல்போ லதுமிக விளக்கலே. | | (இ-ள்.) சொல்விலக்கலங்காரமாமாறுணர்த்தும். புகழினு மிகழினுந் தானே யுரைத்தசொல் லாராயா துரைத்தன்மறுத்து மற்றதின்மிக்க பிறிதொன் றுரைப்பது சொல்விலக் கலங்கார மெனப்படும். (வ-று.) - வெண்பா. - "தானைவேந் தென்பான்றான் றானமா யொன்றீயான், யானென் றொன் றீயா னவனென்றே - னேனையவர், கொள்பொருள் கொள்வான் குடியலைத்து நோயீவான், றெள்பொரு டேற்றாச் சினத்து." எ-ம். - விருத்தம். - "பண்முலை சுரந்த கீதப் பாலொடு வளர்ந்தேன் காமன், பெண்மொழி தவறிற் றன்றோ பெரிதுடன் றுயிரை யுண்ட, திண்மனக் கொடிய கூற்றன் சிதையநான் வளர்த்தேன் பட்ட, புண்மனத் தழுந்தி யாற்றாப் புலம்பு வே னாளுமென்றான்." எ-ம். பிறவுமன்ன. எ-று. (27) | 353. | இலேசமே கருத்தொளித் திடவதைக் காட்டுஞ் சத்துவம் பிறிதிற் சாற்றி மறைத்தலே. | | (இ-ள்.) இலேசவலங்காரமாமாறுணர்த்துதும். மனத்திற் கருதிய வற்றை வெளிப்படுக்கும் புறத்தடையாளங்கள் பிறிதொன்றால் வந்தன வாகக்கூறித் தன்கருத்தினை மறைப்ப திலேச மெனப்படும். (வ-று.) - வெண்பா. - "மதுப்பொழிதார் மன்னவனை மால்கரிமேற் கண்டு, விதுப்பு மயிரரும்பு மெய்யும் - புதைத்தாள், வளர்வா ரணநெடுங்கை வண்டுவலை வாய்த்த, விளைவாடை வந்ததே னின்று." எ-ம். மனவேட்டையா லாயது மறைத்தவாறு காண்க. அங்ஙனம், புகழ்வதுபோலப் பழித்தலும் பழிப்பதுபோலப் புகழ்தலு மிலேச மென்மனார் சிலரே. - தண்டியலங்காரம். - "குறிப்பு வெளிப்படுக்குஞ் சத்துவம் பிறிதின், மறைத்துரை யாட லிலேச மாகும்." இது மேற்கோள். | அவ்விலேசத்தின் பாற்படுஞ் சிலவலங்காரங்கள் வருமாறு:- தண்டி யலங்காரம். - "புகழ்வது போலப் பழித்திறம் புனைதலும், பழிப்பது போலப் |
|
|