புகழ்புலப் படுதலு, மவையு மன்னவென் றறைந்தன ருளரே." என்றாராகலின். (வ-று.) "மேய கலவி விளைபோழ்து மெல்லென்னுஞ், சாய றளராமற் றாங்குமாற் - சேயிழையாய், போர்வேட்ட மேன்மைப் புகழாளன் யான் விரும்புந், தார்வேட்ட தோள்விடலை தான்." இது புகழ்வது போலப் பழித்தது. - "ஆடன் மயிலியலி யன்பனணி யாகங், கூடுங்கான் மெல்லென் குறி யறியா-ளூட, லிளிவந்த செய்கை யீர்வாளன் யாண்டும், விளிவந்த வேட்கை யிலன்." இது பழிப்பதுபோலப் புகழ்ந்தது. எ-று. (28) | 354. | சுவையணி யென்ப சுடுஞ்சினங் காமம் வியப்ப வலமிழிவச் சம்வீர நகையென வெண்மெய்ப் பாட்டி னியைவன கூறி யுண்மெய்ப் பாட்டை யுணர்த்தித் தோற்றலே. | | (இ-ள்.) சுவையலங்காரமாமாறுணர்த்துதும். நெஞ்சங் கடுத்த வற் றைக்காட்டும் புறக்குறி விரித்துக் கூறல் சுவை யலங்கார மெனப்படும். அவையே சினமுதலாக நகையீறாகவைத்த வெண்மெய்ப்பாட்டெனக் கொள்க. அவற்றிற்கு வடமொழி நூலார் சாந்தங்கூட்டி யிவ்வலங்காரத்தை நவ ரசபாவமென்மனா ரென்றுணர்க. அன்றியுஞ் சினமெனினு முருத்திர மெனினுமொக்கும். (வ-று.) "கைபிசையா வாய்மடியா கண்சிவவா வெய்துயிரா, மெய்குலையா வேறாய் வெகுண்டெழுந்தான் - வெய்யபோர்த், தார்வேய்ந்த தோளான் மகளைத் தருகென்று, போர்வேந்தன் றூதிசைத்த போது." இது சினம். "திங்கணுதல் வெயர்க்கும் வாய்துடிக்குங் கண்சிவக்கு, மங்கைத்தளிர் நடுங்குஞ் சொல்லலையுங் - கொங்கைப், பொருகாலு மூடிப் புடைபெ யருங்காலு, மிருகாலு மொக்கு மிவட்கு." இது காமம். "முத்தரும்பிச் செம்பொன் முறித்தைந்து பைந்துகிரின், றொத்தலர்ந்து பல்கலனுஞ் சூழ்ந் தொளிருங் - கொத்தினதாம், பொன்னேர் மணிகொழிக்கும் பூங்கா விரிநா டன், றன்னேர் மொழியுந் தரு." இது வியப்பு. "கழல்சேர்ந்த கால்விடலை காதலிமீ தீண்டு, மழல்சேர்ந்து தன்னெஞ் சயர்ந்தான் - குழல்சேர்ந்த, தாமந் தரியா தசையுந் தளிர்மேனி, யீமம் பொறுக்குமோ வென்று." இது அவலம். "முடைதலையு மூளையு மூன்றடியு மென்புங், குடருங் கொழுங்குருதியும் மீர்ப்ப - மிடைபெய், பெருநடஞ்செய் பெற்றித்தே கொற்றப் போர்க்கிள்ளி, கருடரைச் சீறுங் களம்." இது இழிவு. "கைந்நெரித்து வெய்துயிர்த்துக் காறளர்ந்து மெய்பனிப்ப, மையரிக்கண் ணீர்ததும்ப வாய்புலர்ந்தா - டையல், சினவேல் விடலையாற் கையிழந்த செங்கட், புனவேழ மேல்வந்த போது." இது அச்சம். "சேர்ந்த புறவி னிறைதன் றிருமேனி, யீர்ந்திட் டுயர்துலைதா னேறினா - னேர்ந்த, கொடைவீர மோமென் னிறைகுறையா வன்கட், படைவீர மோசென்னி பண்பு." இது வீரம். "நாண்போலுந் தம் மனைக்குத் தான்சேற லென்னீன்ற, பாண்போலும் வெவ்வழலிற் பாய்வதூஉங் - காண்டோழி, கைத்தலங்கண் ணாகக் கனவுகாண் பானொருவன், பொய்த்தலைமுன் னீட்டி யற்று." இது நகை. எ-று. (29) |
|
|