355. | உதாத்தம் பொருளிற் பதார்த்த மிகலே. | | (இ-ள்.) உதாத்த வலங்காரமாமாறுணர்த்துதும். கேட்போர் வியப்புறத்தன் பொருட்டன்மையின் மேலுஞ் சொற்பயன் மிக்கக் கடந்துரைப்ப துதாத்த வலங்கார மெனப்படும். (வ-று.) "முன்னி னாரெலாம் பின்னுறக் காதலினு முடுகி.' எ-ம். 'பேதைநொந் தழுதகண்ணீர் பெருங்கடல்வெள் ளமாற்றா.' எ-ம். 'வச்சிர மலையினு மனத்தி னாண்மையான்.' எ-ம். வரும். அன்றியும், "கன்றும் வயவேந்தர் செல்வம் பலகவர்ந்து, மென்றும் வறியோரிடர் கவர்ந்து - மொன்று, மறிவரிதாய் நிற்கு மளவினதா லந்தோ, செறிகதிர்வேற் சென்னி திரு." இது செல்வமிகுதி. "மண்ணன்று தன்கி ளையி னீங்கி வனம்புகுந்து, பண்ணுந் தவத்தியைந்த பாத்தனா - ரெண்ணி றந்த, மீதண்டர் கோன்குலையும் வெவ்வசுரர் வேரறுத்தான், கோதண்ட மே துணையாய்க் கொண்டு." இது உள்ளமிகுதி. - தண்டி யலங்காரம். - "வியத்தகு செல்வமு மேம்படு முள்ளமு, முயற்சிபுனைந் துரைப்ப துதாத்த மாகும்." இது மேற்கோள். எ-று. (30) | 356. | ஒப்புமைக் கூட்ட மொத்த குணத்தவை செப்பித் தன்பொரு டெளிவுறக் கூறலே. | | (இ-ள்.) ஒப்புமைக் கூட்ட வலங்கார மாமாறுணர்த்துதும். எடுத்த பொருளை விளக்கவதனோடு நற்குணத்தானுந் தீக்குணத்தானு மொத்தபலவற்றைக் கூட்டி யொருப்படக் கூறுவ தொப்புமைக் கூட்ட மெனப்படும். (வ-று.) திரிகடுகம். - வெண்பா. - "கொள்பொருள் வெஃகிக் குடியலைக்கும் வேந்தனு, முள்பொருள் சொல்லாச் சலமொழி - மாந்தரு, மில்லிருந் தெல்லை கடப்பாளு மிம்மூவர், வல்லே மழைவிலக்குங் கோள்." எ-து. தீயகுண வொப்புமைக் கூட்டம். - காசிகாண்டம். - "வேத மோதிய வேதியர்க் கோர்மழை, நீதி மன்னர் நெறிதனக் கோர்மழை, காதன் மங்கையர் கற்பினுக் கோர்மழை, மாத மூன்று மழையெனப் பெய்யுமே." எ-து. நற்குண வொப்புமைக் கூட்டம். இருமொழி மாலை. - வெண்பா. - "ஓதல் சடை நீட்ட லூண்மறுத்த னீராடல், கோதுளத்துக் கொண்டக்கா லின்னாதே - யேதின், மனத்தூய்மை கையீகை வாய்வாய்மை மூன்றுந், தவத்தூய்மை சாரி னினிது." என்பதிருகுண ஒப்புமைக் கூட்டம் பிறவுமன்ன. - தண்டியலங்காரம். - "கருதிய குணத்தின் மிகுபொரு ளுடன்வைத், தொருபொருள் வைப்ப தொப்புமைக் கூட்டம்." இது மேற்கோள். அன்றியும், | அவ்வலங்கார விரிவு வருமாறு:- தண்டி யலங்காரம். - "புகழினும் பழிப்பினும் புலப்படு மதுவே." என்றாராகலின், (வ-று.) "பூண்டாங்கு கொங்கைப்போர் வெற்குழை பொருப்புந், தூண்டாத தெய்வச் சுடர்விளக்கு - நாண்டாங்கும், வண்மைசால் சான்றவருங் காஞ்சி வளம்பதியு, முண்மையா லுண்டிவ் வுலகு." இது புகழ். "கொள்பொருள் வெஃகிக் குடியலைக்கும் வேந்தனு, முள்பொருள் சொல்லாச் சலமொழி - மாந்தரு, |
|
|