சருவ + ஈசுரன் = சருவேசுரன், உமா + ஈசன் = உமேசன், சித + இந்து = சிதேந்து, அமல + உற்பவி = அமலோற்பவி, மகா + உதரம் = மகோதரம், சுத்த + உதகம் = சுத்தோதகம், ஞான + ஊர்ச்சிதன் = ஞானோர்ச்சிதன், மந்திர + ஊகி = மந்திரோகி, தாம + உதரன் = தாமோதரன் தயா + உற்பத்தி = தயோற்பத்தி, தயா + ஊர்ச்சிதன் = தயோர்ச்சிதன், எ-ம். வரும். அகர ஆகாரங்களில் ஒன்றன் முன் ஏகர ஐகாரங்களில், ஒன்று வந்தால் ஐகாரமும், அவ்விரண்டில் ஒன்றன்முன் ஓகார ஒளகாரங்களில் ஒன்றுவந்தால்ஒளகாரமு முறையே நிலைப்பதவீறும் வரும்பத முதலுங் கெடத் தோன்றுதல் விருத்தி சந்தியாகும். (உ-ம்.) சிவ + ஏகம் = சிவைகம், சிவ + ஐக்கியம் = சிவைக்கியம், தரா + ஏகவீரன் = தரைகவீரன், ஏக + ஏகன் = ஏகைகன், கலச + ஓதனம் = கலசௌதனம், மகா + ஐசுவரியம் = மகைசுவரியம், கோமள + ஓடதி = கொமளௌடதி, திவ்விய + ஒளடதம் = திவ்வியௌடதம், மகா + ஓடதி = மகௌடதி, மகா + ஒளடதம் = மகௌடதம், எ-ம். வரும். ஒரு பதத்துள்ளே முதனின்ற இகர ஈகார ஏகாரங்கள் ஐகாரமாகவும், உகர ஊகார ஓகாரங்கள் ஒளகார மாகவும், அகரம் ஆகாரமாகவும், ஏழாமுயிர் ஆர் ஆகவுந் திரிந்து வருதல் ஆதிவிருத்தி சந்தியாகும். (உ-ம்.) சிவனைப்பணிவோன் - சைவன், வீரத்தின்றன்மை - வைரம், கேவலத்தன்மை - கைவல்லியம், எ-ம். புத்தனைப்பணிவோன் - பௌத்தன், சூரன்றன்மை - சௌரியம், கோசலன்புத்திரி - கௌசலை, எ-ம். தசரதன் புத்திரன் - தாசரதி, எ-ம். கிருத்திகையின் புத்திரன் - கார்த்திகேயன், எ-ம். வரும். (86-ஞ். சூ. காண்க.) இனித்திசைத்தொகையிற் சொல்லும்படியே குவ்வீற்றுத் திசைப்பெயர் அஃதொழித்து, குண-குட-வட-தென், என நிற்கும். அவ்வத்திசைக் கண்ணுளது கருதிப் பகுபதமாகச் சொல்லுங்கால் அது வெனும் விகுதியைக் கூட்டி இவ்விலக் கணத்தாற் குணாது - குடாது - வடாது, எ-ம். இவற்றைப்போ லிலக்கணமின்றாயினுந் தெற்குளது - தெனாது, எ-ம். வழங்கும். (99-ஞ். சூ. காண்க.) எ-று. (18) | | 39. | ஈறுபோயிடை யாவேற்றிரட்டிய சொல்லேமிகுதி தோற்றுமென்ப விலக்கணமின்றி யியைந்துளபிறவே. | | | (இ-ள்.) ஒன்றன்மிகுதிக் காட்ட வதன் பெயரிரட்டி, முதன் மொழி யீற்றொற்றுள தெனிற்கெட்டு அதனயல் உயிராகாரமாகத் திரிந்து, வல்லி னம்வரினு மிகாமல்வழங்கும். (உ-ம்.) பலபலகோடி, கோடாகோடி, பல பலகாலம், காலாகாலம், நீதாநீதி, கோணாகோணம், குலாகுலம் தூராதூரம், தேசாதேசம், கருமாகருமம், எ-ம். பிறவுமன்ன. இப்பலவிகற்பமன்றியே இலக்கண மில்லாமையும் புலவரால் வழங்கும் விகாரங்களுமுள வெனக்கொள்க. அவையே இலக்கணப்போலிமொழி, எ-ம். மரூஉமொழி, |
|
|