மில்லிருந் தெல்லை கடப்பாளு மிம்மூவர், வல்லே மழைவிலக்குங் கோள்." இது பழிப்பு. எ-று. (31) | 357. | ஒப்புமை யேற்ற மொன்றற்கொன் றுமிகச் செப்பிய பலவின்மேற் செய்பொரு ளேற்றலே. | | (இ-ள்.) ஒப்புமை யேற்ற வலங்காரமாமாறுணர்த்துதும். வைத்த பலவடி யேறினாற் போல நற்குணத்தானுந் தீக்குணத்தானு மொன்றற்கொன்று மிக்கதாகப் பலவற்றைக்கூறி யெல்லாவற்றிலு மேற் றானெடுத்த பொருளே நிற்பதாகக் கூறுவ தொப்புமை யேற்ற மெனப்படும். ஆகையிற் செய்த வுருவ முயர்ந்த குறட்டி லேற்றிக் காட்டினாற் போல வாகு மென்றறிக. (வ-று.) - வெண்பா. - "பயனில் சொல்லின்னா மிக்கின்னா மெய்ப்பாட்டி, னயனில்சொன் னன்னாடா தன்னை - வியந்தனசொல், லாங்கின்னா பின்னின்றே யம்புற்சொல் லம்மூன்றி, னூங்கின்னா வாழு முயிர்க்கு." பிறவுமன்ன. எ-று. (32) | 358. | விபாவனை யென்ப விளங்கிய வுலக சுபாவனை யலத்திறந் தோற்றி யியம்பலே. | | (இ-ள்.) விபாவனை யலங்காரமாமாறுணர்த்துதும். உலகினி னொ ழுக்கத்தேற்ற காரணமொழிய நீக்கி யியல்பினானுங் குறிப்பினானும் பிறி தொரு காரணந் தோன்ற வுரைப்பது விபாவனை யெனப்படும். என்னை, விபாவனை யெனின மொழுக்கவின்மை யெனினு மொக்கும். (வ-று.) "பூட்டாத விற்குனித்துப் பொங்குமுகி லெங்குந், தீட்டாத வம்பு சிதறுமால்." - தேம்பாவணி. "பாயா வேங்கை யையென்புழிப் பைம்பூ, வீயாப் புண்டரீக மெனவெண்ண, லாயாப் பேதமையாம் பகைகொ, லோயாக் கோல்வழு வோகட னென்றான்." எ-ம். "தீயின்றிவேந் தமியோர் சிந்தை செழுந்தேன்றல், வாயின்றி மஞ்ஞை மகிழ்தூங்கும் - வாயிலா, ரென்றிச்சிலரூட றீர்ந்தா ரமரின்றிக், கன்றிச் சிலைவளைத்த கார்." எ-து. காரண விபாவனை. "கடையாமே கூர்த்த கருநெடுங்கண் டேடிப், படையாமே போந்தன பாவாய் - கடைஞெமியக், கோட்டாமே கோடும்புருவங் குலிகச்செப், பாட்டாமே சேந்த வடி." எ-து. இயல்புவிபாவனை. "பூட்டாத விற்குனித்துப் பொங்க முகி லெங்குந், தீட்டாத வம்பு சிதறுமா - லாட்டமாய்க், காணாத கண்பரப்புந் தோகை கடும்பழிக்கு, நாணாத யாத்தார் நமர்." எ-து. வினையெதிர்மறுத்துப் பொருள் புலப்படுத்த விபாவனை. "காரண மின்றி மலையா னிலங்க னலு, மீரமதி வெதும்ப லென்னிமித்தங் - காரிகையார்க், கியாமே தளர வியல்பாக நீண்டனகண், டாமே திரண்ட தனம்." எ-து. பொதுவகையாற் காரணம் விலக்கிக் காரியம் புலப்படுத்த விபாவனை. "பாயாத வேங்கை மலரப் படுமதமாப், பூவாத புண்டரிக மென்றெண்ணி - மேவும், பிடிதழுவி மாறதிருங் கானிற் பிழையால், வடிதழுவு வேலோன் வரவு." எ-து. வேறுபாட்டு விபாவனை. - தண்டி யலங்காரம். - "உலகறி காரண |
|
|