மொழித்தொன் றுரைப்புழி, வேறொரு காரண மியல்பு குறிப்பின், வெளிப்பட வுரைப்பது விபாவனை யாகும்." இது மேற்கோள். எ-று. (33) | 359. | விசேட மெனக்குறை விளம்பி யவற்றான் மேன்மை படப்பொருள் விளக்கிய நெறியே. | | (இ-ள்.) விசேட வலங்காரமாமாறுணர்த்துதும். எடுத்த பொருட் குக் குணத்தானுந் தொழிலானும் பொருளானு முறுப்பினானுங் குறைபா டுள்ளதாகக் காட்டி யக்குறை காரணமாக வதற்கு மேன்மை தோன்ற வுரைப்பது விசேட மெனப்படும். (வ-று.) வெண்பா. - "யானை யிரதம் பரியா னிவையில்லைத், தானு மனங்கன் றனுக்கரும்புந் - தேனார், மலரு மம்பாயினு மார னமர்செய், துலகு கைக்கொண்டா னொருங்கு." எனப் பொருட் குறையு முறுப்புக் குறையுஞ் சொல்லி மேம்பாட்டுரைத்தவாறு காண்க. பிறவுமன்ன. எ-று. (34) | 360. | விரோத மென்ப விகற்ப முரண்படு மன்னிய சொற்பொரு ளுன்னிய மாக்கலே. | | (இ-ள்.) விரோத வலங்காரமாமாறுணர்த்துதும். மாறுபட்ட சொ ல்லும் பொருளு மொன்று பட்டியலும்படி வைத்துரைப்பது விரோதவல ங்கார மெனப்படும். இதுவே செய்யுளிலக்கணத்துண் முரண்டொடை யென்று வழங்கு மென்றுணர்க. (வ-று.) "உருவில்லா னுருவாகி யுலகிலொரு மகனுதிப்பக், கருவில்லாக் கருத்தாங்கிக் கன்னித்தா யாயினையே." எ-ம். வெண்பா. - "தந்தையை யீன்றதாய் தான்றாயுங் கன்னியுமாய், வந்தியையுங் காவலூர் வந்தேத்திச் - சிந்தையெழக், காலையு மாலையுங் கைகூப்பிக் காறொழுதான், மேலை வினையெல்லாங் கீழ்." எ-ம். "சோலை பயிலுங் குயின் மழலை சோர்ந்தடங்க, வாலு மயிற்கணங்க ளார்த்தெழுந்த - ஞாலங், குளிர்ந்த முகில்கறுத்த கோபஞ் சிவந்த, விளர்ந்த துணைப்பிரிந்தார் மெய்." எ-ம். "காலையு மாலையுங் கைகூப்பிக் காறொழுதான், மேலை வினையெல்லாங் கீழ வாங் - கோலக், கருமான்றோல் வெண்ணீற்றுச் செம்மேனிப் பைந்தார்ப், பெருமானைச் சிற்றம் பலத்து." எ-ம். வரும். "இனமா னிகல வெளியவே யென்னும், வனமேவு புண்டரிகம் வாட்டும் - வனமார், கரியுருவங்கொண்டு மரிசிதறக் காயும், விரிமலர்மென் கூந்தல் விழி." இது சிலேடை விரோதம். தண்டிலங்காரம். - "மாறுபடு சொற்பொருண் மாறுபாட் டியற்கை, விளை வுதர வுரைப்பது விரோத மாகும்." இது மேற்கோள். எ-று. (35) | 361. | பிறிதுரை யணியே பெருந்துயர் முதற்காட்ட முன்னிலை யாரொடு மொழித லொழித்துப் பன்னிலை யாரொடு பகர்த லென்ப. | | (இ-ள்.) பிரிதுரை யலங்கார மாமாறுணர்த்துதும். ஒருவரை முன் னிலையாகப் பேசுங்காலை யவர்களை நீக்கி யகன்றவராயினு நல்லறிவில்லா |
|
|