விலங்கு - பறவை - மலை - மர - முதலியவாயினு முன்னிலையாகப் பேசுவது பிறிதுரை யலங்கார மெனப்படும். (வ-று.) - விருத்தம். - "மின்னென மிளிர்ந்து நீங்கி வீய்ந்தவான் சொல்லீர் சொன்மின், பொன்னென மலிசீ ரென்னப் புகழென வுலகிற் பன்னாட், கொன்னெனத் தேடி வைத்த கொழும் பொரு ளொடுவாழ் நாளு, மன்னென வீங்கொன் றுண்டோ மருண்டநாந் தெளிய வென்றான்." - என்பதிதனு ளுயிரிறந் தாரைப் பேசினவாறு. - தேம்பாவணி. - "துள்ளிவா ழுழைகாள் கொம்பிற் றுன்னிவாழ் குயில்கா டூய்தே, னள்ளிவா ழளிகா டேன்கா ளழனிறக் கமலப் பைம்பூம், பள்ளிவா ழோதி மங்காள் பறித்துவாழ் கொடிகாள் கோற, லுள்ளிவாழ் வரிகாள்சொ ன்மின் னுயிர்தரித் தலிற்றீ துண்டோ." என்பதிதனுள் விலங்கும் பறவையு மென் றிவற்றோடு பேசினவாறு. - தேம்பாவணி. - "என்னெஞ் சொப்ப விருபொழுதும் விருட்பொழிலே, புன்னெஞ் சொப்ப வுயிரெல்லா நிழற் றுயருட், டன்னெஞ் சொப்பத் தந்தோம் புந்தயைப் பெருமா, னின்னெ ஞ்சொப்ப நிறுத்தினையேக் காடென்றான்." என்பதிதனுட் டிருமக னக ன்றுதுயராற் சூசை நொந்தொரு சோலையைப் பேசினவாறு:- அங்ஙனந் தன்னெஞ்சாயினுந் தன் கண் முதலிய வுறுப்புகளாயினு முன்னிலையா கப்பேசுவ திவ் வலங்கார மாகும். அங்கேதானே யகன்றமகற்குத் தாயும் வருந்திச் சொன்னதாவது:- "கயலரம் விழியே கடலரமவனை, யயலா டலிலா கியகன் றன்னே, யியலாத விடுக்க ணியைந் தினிநா, னுயலாம் விழியொன் றுளதே லுரையீர்." என்பதிதனுட்டன் கண்ணோக்கிப் பேசி னவாறு. பிறவுமன்ன. எ-று. (34) | 362. | விடையில் வினாவே விடைவேண் டாமையு மடைய லாரையு மஃறிணை யவ்றையு மனவியப் பாதி வழங்கப் பலகுணம் வினவினாற் போல விளம்பிய நிலையே. | | (இ-ள்.) விடையில் வினாவலங்காரமாமாறுணர்த்துதும். மறுமொழி வேண்டாமையு முன்னிலை யல்லாரையு மறிவில வற்றையும் வினாவினாற் போல வுரைப்பது விடையில் வினாவணி யெனப்படும். இதுவே யதிசயமு மையமு மகிழ்ச்சியுஞ் சினமு முதலியவற்றைக் காட்டவு மொன்றனை மறுப்பவு நொந்து புலம்பவு முதவு மென்றுணர்க. (வ-று.) விருத்தம். - "கண் பட் டுறங்கவென் னிறையோன் கண்டேனோ கண்டணைத் தேனோ, பண்பட் டினிய மழலைச்சொற் பகர வினிதிற் கேட்டேனோ, புண்பட் டுளை யென் னெஞ்சுவப்பப் பூங்கண் ணென்மேன் மலர்ந்தனவோ, வெண்புட் டிறப்ப வுயிர்செலவோ வென்மே லிரங்குந்தயை யிதுவோ." என்பது மகிழ்ச்சி வினாவணி. - விருத்தம். - "கெட்டோ நாமோ மின்னென வொல்கிக் கெடுநன்றி, யிட்டோ நாமோ விட்டதி னிஃதோ பயனந்தோ, பட்டோ நாமோ புன்னய நக்கிப் பரவீட்டை, விட்டோ நாமோ வேகு துரைமோ வெனவேவார்." என்பதிதனுண் ணணுகி நொந்தார் புலம்பிய வினாவணி. |
|
|