365. | ஒழிபணி பலவற்றை யொழித்தன வுரைத்தலே. | | (இ-ள்.) ஒழிபலங்கார மாமாறுணர்த்துதும். தன் பொருள் விளக்க ற்குரிய பற்பலவற்றை யுரைக்க மாட்டா தொழித்தாற் போல வவற்றைச் சுருங்கக்காட்ட லொழிபணி யெனப்படும். (வ-று.) - வெண்பா. - "நூன லமுஞ் சீர்நலமு நொந்தொன்னா ரேற்றியதன், வேனலமு மாற்றா விளம்பனே - தேனலமுண், டீன்ற வருண்முகிற்கை யெங்கோன் கொடையொன்றே, தோன்ற வுரைப்பேன் றொழுது." எனப் புகழொழிபணி. - வெண்பா. - "உள்பொருள் சொல்லா யுளைவார்கண் டொன்றீயாய், கொள்பொருள் வெஃகிக் குடியலைப்பா - யெள்பொரு, ளின்னா வினிதென்பா யிஃசிறிய மெய்க்கடவு, டுன்னாப் பகைப்பானென் சொல்." என விகழ்பொழி பணி. பிறவுமன்ன. எ-று. (40) | 366. | அமைவணி யல்லவு மாமென் றதுபோற் சமைந்து மற்றொன்றன் றகவெழ வியம்பலே. | | (இ-ள்.) அமை வலங்கார மாமாறுணர்த்துதும். நன்மை யல்லனவு மெய்யல்லனவும் பிறர்க் குபகாரமாய் நல்லவாகவு முள்ளவாகவு மொப்பித்தாற்போலமைந்து பிறதொன்றனை மிக்குரைத் தொறுத்த லமைவணி யெனப்படும். (வ-று.) - வெண்பா. - "பொய்யுங் களவும் புறக்காமத் தீதி ழிவு, நையு முயிர்க்கே நவையன்றோ - செய்யுன், குலத்துரிமை யென்றா யுள தெனினுஞ் செந்தீத், தலத்துரிமை தானோ வுனக்கு." எ-ம். பிறவுமன்ன. எ-று. (41) | 367. | சிலேடை யென்ப திரிசொல் பலவிணைந் திருபய னாக வொருதொடர் புரைத்தலே. | | (இ-ள்.) சிலேடை யலங்காரமாமாறுணர்த்துதும். பல பொருள்குறி த்த வொரு சொல்லாகிய திரிசொற் கொண்டிருபயனைக் கொள்ளும்பா ட்டை முடிப்பது சிலேடை யெனப்படும். (வ-று.) - வெண்பா. - "பாடல மேறிப் பகைக்கிள்ளை யார்த்தோட்டிச், சேடலர்தன் பூத்த தினைகாத்தா - னாட்க, மார்ந்த கவிகையால் யாதனையு மாங்கோட்டி, யோர்ந்துறைமே லுற்றா னொளி." என்பதிதனிற் பாடல மரத்திலேறிக் கிளிகளைக் கூப்பிட் டோட்டிப் பூத்த தினைப் புனங்காத்தா னெனவுந் துவரங்காட்டி னிறைந்த குரங்குகள் யாவையுங் கையா லோட்டினா னெனவு மொரு பயனாகக் கொண்டு பின்னையுங் குதிரையேறி பகைவர் பரிப்படையைப் பொருதோட்டித் தன்னாட்டுச் சிறுமை காத்தா னெனவு மளித்த பொன்னிறைந்த கொடையாலாங் கில்லாம்படி துன்பங்களையு மோட்டினானெனவும் வேறொ ருபயனாகக் கொள்ளவும் பெறுமெனக் காண்க. அன்றியும். - விருத்தம் - "கனிநிழல்பூத் தருந்தருநான் கடுத்தும் மூன்றுங் கழித்துக்காய் தளிர் மேய்ந்து சவலை யோடைக், கினிதவழ்தே னாண்மலர்பஃ றொடையே சூடி யியைவெள் ளித்தளைக் குறட்கொம் பிடைத்தூண் வைத்த, |
|
|